பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 தொல்காப்பியர் இலக்கியப் பகுப்பு முறைகள் தோற்றுவாய் பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனார் அவர்கள் ஓர் இலக்கியத் திறனாய்வு நூலின் அணிந்துரையில் "பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்நாட்டில் தொல்காப்பியரும் மேலைநாட்டில் அரிஸ்டாட்டிலும் வளர்த்த ஒருதுறை இலக்கியத் திறனாய்வாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்கள். தொல்காப்பியர் சொல்லதிகார ஈற்றில், செய்யுள் மருங்கிலும் வழக்கியல் மருங்கிலும் மெய்பெறக் கிளந்த கிளவி யெல்லாம் பல்வேறு செய்தியின் நானெறி பிழையாது சொல்வரைந் தறியப் பிரிந்தனர் காட்டல் (எச்சவியல் - 67) என்ற புறனடை நூற்பாவொன்றினைக் கூறியுள்ளார். இந்நூற்பா செய்யுளிடத்தும், உலக வழக்கிடத்தும் முடியாது நின்ற சொற்களை உத்திவகையால் நூல்நெறி பிழையாது முடித்துக் கொள்ளுமாறு கூறுகின்றது. இங்கே ஆசிரியர் பொதுவாக உலகவழக்கு, செய்யுள் வழக்கு என்னும் இரண்டு வழக்கு நெறியினைக் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியத்திற்குச் சிறப்புப் பாயிரம் செய்த ஆசிரி யர் பனம்பாரனார், வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறு நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி ■■■■■■■■■■轟輯 劃劃 體 ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■ ■■■■■■■■■