பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

283 அறையும் ஆடரங் கும்படப் பிள்ளைகள் தரையிற் கீறிடத் தச்சரும் காய்வரோ? பொறையிற் கேள்வியில் லாதவன் புன்கவி முறையில் நூலுணர்ந் தோரும் முனிவரோ? ய இப்பாட்டில் குழந்தைகள் கற்பனை உள்ளம் _த்து விளையாடி மகிழ்வதைப் போல யானும் னையின் அடியில் கவிபாடுகிறேன் என்பதைக் குறிப்பாக _ாத்தி யுள்ளமையை நாம் உணர வேண்டும். பொய்தல் என்னும் சொல் பிணையில் உள்ள ஒரு பாடல். தலைமகன் வினை.வயிற் பிரிவான் போலும் என்று கருதிய தலைவி அதனால் மனம் _றுபட்டாள். அதனை உணர்ந்த தலைமகன் அவள் பதைப் போக்குவதாக அப்பாட்டு அமைந்துள்ளது. பொன்னும் மணியும் போலும் யாழநின் நன்னர் மேனியும் நாறிருங் கதும்பும் போதும் பணையும் போலும் யாழநின் மாதர் உண்கணும் வனப்பின் தோளும் இவைகாண் தோறும் அகமலிந்து யானும் அறநிலை பெற்றோர் அனையன், அதன்தலைப் பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன் வினையும் வேறுபுலத் திலனே நினையின் யாதனிற் பிரிவாம் மடந்தை! காதல் தானும் கடலினும் பெரிதே மடந்தையே! நின் மேனியும் கூந்தலும் பொன் போலவும் நீலமணி போலவும் காட்சியளிக்கின்றன. நின் மையுண்ட கண்ணும் அழகிய தோளும் முறையே மலர் போலவும் மூங்கில் போலவும் விளங்குகின்றன. பவறுப்புக்கள்ைப் பார்க்குந் தோறும் பார்க்குந் தோறும் அறத்தின் பயனை நுகர்பவர் போல் யான் பெருமகிழ்ச்சி டையேன். இவற்றிற்கெல்லாம் நம்முடைய பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் செய்து (கற்பனை செய்து) விளையாடத் தொடங்கி விட்டான். எனக்கு இப்பொழுது வேற்றுப் புலத்தில் வேலையும் இல்லை. யான் எதனாற்