பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

285 _னை மிகச் சிறந்த கற்பனையாகும். அவர்கள் கற்பனைக்கு வழங்கிய பெயர் நாடக வழக்கு அல்லது புனைந்துரை _பவையாகும். ஒரு புலவன் கற்பனை கலவாத உலகியல் _ாலும் கற்பனை செறிந்த நாடக வழக்காலும் _ப்யுட்களைப் பாடலாம் என்பர் தொல்காப்பியர். நாடக _கு என்றால் புலவரால் நாட்டிக் கொள்ளப்படும் _காகும். இதனை நாற்கவிராச நம்பி என்பவர் புனைந்துரை வழக்கம் என்பர். கற்பனையும் நாடக வழக்கும் கற்பனை என்ற சொல்லுக்கு முன்னே கட்டுரைத் தொடக்கத்தில் தெளிவாகப் பொருள் கூறப்பட்டுள்ளது. அதன்படி ஒர் உண்மைப் பொருளை மற்றொரு பொய்ப் பொருளாகக் கருதிக் கொள்வது கற்பனையாகும். நாடக வழக்கு என்பதற்குச் "சுவைபட வருவனவெல்லாம்" ஓரிடத்து வந்தனவாகத் தொகுத்துக் கூறுதல்" என்று இளம்பூரணரும் புனைந்துரைப்பது என்று நாற்கவிராச நம்பியும், இவ்வதி காரத்து நாடக வழக்கென்பன புணர்ச்சி உலகிற்குப் பொது வாயினும் மலை சார்ந்து நிகழுமென்றும், காலம் வரைந்தும், உயர்ந்தோர் காமத்திற்கு உரியன வரைந்தும், மெய்ப்பாடு தோன்றவும், பிறவாறும் கூறும் செய்யுள் செய்யும் வழக்காகும்” என்று நச்சினார்க்கினியரும் _றுவதைக் கருதின் இவ்வளவு பொருளையும் கற்பனை ான்ற சொல் அச்சொல்லின் அடிப்படைப் பொருட் காரணத்தினாற் பெற்று வருவதாகத் தெரியவில்லை. அது ாங்ானமாயினும் தொல்லோர் நாடக வழக்கு, புனைந்துரை வழக்கு என்று கூறியவற்றைத்தான் இக்காலத்தார் கற்பனை ான்று கூறுகின்றனர் என்று அமைத்துக் கொண்டு, நாடக வழக்கு, புனைந்துரை வழக்கு என்பனவற்றிற்குக் கொள்ளும் பொருளையும் கற்பனை என்ற சொல்லிற்குக் கூறிக்கொள்ளு ேைத இப்பொழுது தக்கதாகும். கற்பனை பயன்படுவது இவ்வுலகத்தை நாம ரூபக் கிரியை என்ற வடிவத்தில் கற்பனைக் கண்கொண்டு பார்ப்பது பந்தத்திற்கு ஏது