பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

287 நாடக வழக்கு பொருளியலில் இரண்டாவது நூற்பாவை எடுத்துக் கொள்வோம். நோயும் இன்பமும் இருவகை நிலையில் காமம் கண்ணிய மரபிடை தெரிய எட்டன் பகுதியும் விளங்க ஒட்டிய உறுப்புடை யதுபோல் உணர்வுடை யதுபோல் மறுத்துரைப் பதுபோல் நெஞ்சொடு புணர்த்தும்; சொல்லா மரபின் அவற்றொடு கெழிஇச் செய்யா மரபில் தொழிற்படுத் தடக்கியும் அவரவர் உறுபிணி தமபோற் சேர்த்தியும் அறிவும் புலனும் வேறுபட நிறீஇ இருபெயர் மூன்றும் உரிய வாக உவம வாயிற் படுத்தலும் உவமம் ஒன்றிடத் திருவர்க்கும் உரியபாற் கிளவி (தொல் - பொருளியல் - 2) நச்சினார்க்கினியர் நாடக வழக்கிலும் (அகத்திணை 36) என்ற நூற்பாவுரையில், "மெய்ப்பாடு தோன்றப் பிறவாறும் கூறும் செய்யுள் வழக்கு" என்னும் நாடக வழக்கினை இந்நூற்பா கூறுகின்றது. தொல்காப்பியர் உலகவழக்கில் வழங்கும் இலக்க _ாத்தில் பக்கச் சொல்லைக் கிளவியாக்கத்தில் தகுதியும் வழக்கும் தழிஇன ஒழுகும் பகுதிக் கிளவி வரைநிலை சிலவே (17) _றும் நூற்பாவால் கூறுகின்றார். செய்யுள் வழக்கில் வழங்கும் இலக்கணத்தில் பக்கச் சொல்லைப் பொருளியலில் மேற்காட்டிய நூற்பா முதலானவற்றிற் கூறுகின்றார். இலக்க வத்தில் பக்கச் சொல் என்பது இலக்கண நெறியொடு _ாத, பகுதிப்ட்ட, ஒரு கூற்றுச் சொல்லாம். அவை பொருளியலில் வருவதை நோக்குவோம். மரபு பிறழாத காமப் பொருளைக் கருதிய இடத்தே இன்பநிலை துன்ப நிலை என்னும் இருவகை நிலையிலே எட்டு மெய்ப்பாடும் விளங்கும்படி இவ்விலக்கணத்திற் பக்கச் சொல் வரும்.