பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 என்னும் குறளில் தலைவியின் நெஞ்சம் தலைவியின் ஏவலைக் கேட்காமல் மறுத்துரைப்பது போல் கூறப்பட் டுள்ளது. சொல்லா மரபினவற்றைச் செய்யாத தொழிலைச் செய்வனவாகக் கூறுதல் சொல்லா மரபின என்பவை, ஞாயிறு திங்கள் அறிவே நானே கடலே கானல் விலங்கே மரனே புலம்பது பொழுதே புள்ளே நெஞ்சே அவையல பிறவும் நுதலிய நெறியால் சொல்லுந போலவும் கேட்குந போலவும் சொல்லியாங் கமையும் என்மனார் புலவர் செய்யுளில் சொல் சொல்லா முறைமையுடையனவாகிய ஞாயிறு திங்கள் முதலானவற்றுடன் அவை சொல்லுவன போலவும் செய்யாத தொழிலை அவற்றின் மேல் ஏற்றி அவை செய்தனவாகவும் கூறப்படுவதுண்டு. یس கானலும் கழறாது கழியும் கூறாது தேனிமிர் நறுமலர்ப் புன்னையும் மொழியாது ஒருநின் அல்லது பிறிதியாதும் இலனே இருங்கழி மலர்ந்த கண்போல் நெய்தல் கமழஇதழ் நாற்றம் அமிழ்தென நசைஇ, தண்டா தூதிய வண்டினம் களிசிறந்து பரிசிய தளரும் துறைவனை நீயே சொல்லல் வேண்டுமால் அலவர் தலைவி சொல்லா மரபினையுடைய நண்டொன்றினைப் பார்த்து, காமம் மிக்க கழிபடர் கிளவியால், தலைவனிடம் துதாகச் சென்று யான்படும்துன்பத்தை எல்லாம் கூறிவருதல் வேண்டும் என்று கூறுகின்றாள். அலவனே!. யான் உற்ற வருத்தத்தினை தலைவனிடத்து சென்று இக்கானலும் எடுத்துச் சொல்லாது. இக்கடற்கழியும் கூறாது. இந்த நறுமலர்ப் புன்னையும் மொழியாது. தூதுரைப்பதற்கு ஒன்றாகிய நின்னை யல்லது வேறு