பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 வேயைத் தொடும் என்றமையால் உவமம் ஒன்றியவழி அறிவும் புலனும் வேறுபட உவமவாயிற் படுத்தலாம். இப்பாட்டு உவமையின் அடிப்படையில் எழுந்த நாடக வழக்கு. எனவே காமங் கருதிய மரபில், நோய், இன்பம் என்னும் இருவகை நிலையில் மெய்ப்பாடு தோன்றுமாறு, உறுப்புடையது போல் உணர்வுடையது போல் மறுத் துரைப்பது போல், இம்மூன்றும் இல்லாத நெஞ்சோடு புணர்த்ததும் சொல்லும் செய்கையும் இல்லாத புள், கழி, கானல் முதலானவற்றொடு மேற்கூறியவாறு கூறுவதும், ஏனையவை உற்றபிணி தமபோற் சேர்த்தியும், அறிவும் புலனும் வேறுபட உவம வாயிற் படுத்தலும் ஆகிய இந்நான்கும் இலக்கண நெறியுடன் கூடியன அல்ல. இவை நாடக வழக்கத்தைச் சார்ந்த (புனைந்துரை) இலக்கணத்தில் பக்கச் சொல்லாம். . இவ்வாறு கூறுவது தலைவன் தலைவிக்கும் சில சமயத்தில் தோழிக்கும் நற்றாய்க்கும் செவிலிக்கும் உரித்தாய் வரும் என்ற செய்தி மேற்காட்டிய நோயும் இன்பமும் என்ற நூற்பாவாலும் அடுத்த சில நூற்பாவாலும் நமக்குப் புலனாகின்றது. இளம்பூரணர் பாற்கிளவி என்பது, யாண்டும் பயிலாது வரும் ஒரு கூற்றுச் சொல் என்னப்பட்டது. அதனைக் கெழுமிய சொல் 'பால்கெழுகிளவி (பொருளியல் - 5) யாயிற்று. ஆண்டு நற்றாய் கூறியதற்குச் செய்யுள், கருமணல் கிடந்த பாவை என் அருமகளே என் முயங்கினள் அழுமே o (அகநானூறு - 165) செவிலி கூறியதற்குச் செய்யுள், தான்தாயாக, ...... வந்து, (திணைமாலை 150) எனவரும் தோழி கூறியதற்குச் செய்யுள் வந்த வழிக்காண்க என்பர். இவை போன்ற பகுதிகளைத் தான் பிற்காலத்தார் கற்பனை என்று கூறிவருகின்றனர்.