பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 பாடுபொருள் அமைப்பு அப்பாட்டில் நன்கமையவில்லை என்பனவாகவே காட்டும். உயர்திரு மு. வரதராசனார் எழுதிய ஒவச்செய்தி என்ற நூலில்"ஒசைச் சிறப்பு சொற்சிறப்பு முதலியவை இலக்கியத்தின் வாழ்வுக்கு உடையும் அணியும் போன்றவை. பொருட்சிறப்பே உயிர் போன்றது. ஆதலின் இலக்கியம் ஆராய்வோர் ஒருபாட்டின் ஒசையின்பத்திலும் சொல்லின்பத்திலும் மயங்கி நிற்காமல், அதன் கருத்தின் பத்தில் திளைக்க முயலுவதே சிறந்த கடமையாகும். "பாட்டின் அகத்தே வேறு என்ன உணர்வது என்று அறியாதபோது, அதன் புற அமைப்பில் கருத்தைச் செலுத்து கிறோம் என்று ரிச்சர்ட்ஸ் என்னும் அறிஞர் உணர்த்தும் உண்மையும் இங்கு கருதத்தக்கது" என்பர் (ஒவச்செய்தி, ப-ள். 32-33). உயர்திரு வரதராசனார் அவர்கள் பாட்டின் இருவகை அமைப்பைக் கூறி விட்டுப் பொருளிலக்கணம் என்ற தலைப்பில் எழுதுவதையும் காண்போம். பண்டைத் தமிழ்ச் சான்றோர் இந்த உண்மையைத் தெளிந்த பெருமக்களாவர். அதனால், எழுத்திலக்கணத்தையும், சொல்லிலக்கணத்தையும் விட, விரிவுடைய பொருளிலக்கணம் கண்டு போற்றினார். தாம் இயற்றிய இலக்கியத்திலும் அகப்பொருள் புறப்பொருள் பற்றி கருத்துக்களை அமைப்பதில் வரம்பு கடவாமல் நின்றனர். கட்டுப்பாடு குறைந்ததும் ஒசையின்பம் குறைந்ததும் ஆகிய ஆசிரியப்பாவைப் பலரும் கருவியாகக் கொண்டு பாட்டெழுதியவர். தினை துறை முதலாய வரையறைகளைப் போற்றுவதைக் கடமையாகக் கொண்டனர். உவமையை ஆராயின் திணை துறை முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் முதலியன இலக்கண நூல்களோ இலக்கிய நூல்களோ விதிக்கும் கட்டுப்பாடுகள் அல்ல; வாழ்க்கை உணர்த்தும் வரையறைகளே அவை" என்பர் (ஒவச்செய்தி ப. 33). இனிப் பாட்டினைப் பிற நாட்டினர் எவ்வாறு கருது கின்றனர் என்பதை ஆராய்வோம்.