பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 காலமும் ஆம். இந்த ஆறு திங்களில் வினை முடித்துக் கொண்டு கார்காலத் தொடக்கத்தில் தங்கள் மனைவியை உடைய மனையகம் வந்து சேர்வர். வந்தவர் கார்காலத்திற் குரிய ஆவணி புரட்டாசியும், குறிஞ்சிக் குரிய கூதிர் காலத் திங்களாகிய ஐப்பசி கார்த்திகையும், முன்பணித் திங்களாகிய மார்கழியும் தையும் மனையகத்திருந்துப் பின்னர் பின்பனிக் காலம் வர முன்போற் பிரிவர். இவ்வாறு மனையில் உறை தற்கு ஆறு திங்களும், வெளிநாட்டிற் சென்று தொழில் புரிதற்கு ஆறு திங்களுமாக பழங்காலத் தமிழர்க்கு ஒர் யாண்டு பயன்பட்டது. கருப்பொருள் ' ஒர் இடத்தில் காலம் பற்றித் தோன்றும் பொருளைக் கருப்பொருள் எனலாம். ஆனால் இளம்பூரணர் இடத்திலும் காலத்திலும் தோன்றும் பொருள் கருப்பொருள் என்பர்.ஒரு நாட்டில் அல்லது இடத்தில் காலம் பற்றி என்னென்ன பொருள்கள் தோன்றுகின்றன என்று அறிந்து, அவற்றை வகைப்படுத்திக் குறிக்கும் அறிவைப் பழைய காலத்திலேயே தமிழர் பெற்றிருந்தனர். ஓர் நாட்டிலே நிகழும் தெய்வ வழிபாடு, அந்நாட்டவர் தம் உணவுப் பொருள், அந்நாட்டின் விலங்கு பறவை, தாவரம், மலர் முதலியனவும் அந்நாட்டவர் பயன்படுத்தும்' பறை, யாழ் முதலியனவும் அந்நாட்டவர் செய்யும் தொழில் வேறுபாடுகளும் ஆகிய இவையெல்லாம் கருப்பொருள் என்ற தலைப்பில் அடங்குகின்றன. உரிப்பொருள் மூன்றாம் நிலையில் நிற்பது உரிப்பொருளாகும். இதனை இளம்பூரணர் மக்கட்கு உரிய பொருள் என்பர். சொல்லிலக்கண நூலாவது மக்கட் சுட்டை உயர்தினை என்று கூறுகின்றது.அந்த உயர்திணையாகிய மக்கட் சுட்டிற்கு 1. யாழ், பறை என்றும் இவற்றைக் குறிப்பதைக் கருதினால், தமிழர்தம் இசை நாடக விருப்பம் புலனாம்.