பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 யெல்லாம் அந்நூலின் முகப்பிலுள்ள முகவுரையில் அமைந்திருக்க வேண்டும் என்பதாயிற்று. அடுத்து, அலங்காரமாதற் சிறப்பிற்கும் திருவமைந்த மாநகரத்திற்கு உருவமைந்த வாயின் மாடம் உவமை. இங்கே கூறிய நகரம் சாதாரணமான நகரமன்று, எல்லாச் செல்வங்களும் நிறைந்த நகரமாகும்.அதற்குப் பாதுகாவலாக அகழியும் அரணும் இருக்கும். அந்நகரத்துள் மக்கள் நுழை வதற்கு வாயில் வேண்டும். அதற்கு வாயில் மாடம் என்றும், கோபுர வாயில் என்றும் பெயர். ஒருவர் வாயில்மாடத்தின் முன்வந்து நின்று புகுந்துசெல்லும் பொழுது அவ்வாயில் மாடத்தின் அழகியதோற்றம் (அலங்காரத் தோற்றம்) வருபவரை மிகவும் கவர்வதாய், அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்றாற் போல, திருவமைந்த மாநகரத்தின் அழகினையெல்லாம் முன்னே உணர்த்துவதாய் அமைய வேண்டும். அதுபோலவே பாயிரமும் சிறந்த நூலின் உட்பகுதிப்பொருளை உணர்த்தும் பெரும்பொருளை முந்துறக்கூறி நூலினுள் நுழைபவர்க்கு வாயிலாய் நூலினை அழகுபடுத்தி அழகுற நிற்கும். பாயிரத்தைக் கற்காமல் நூலை மட்டும் கற்கப்புகும் மாணவன் இடர்ப்படும் அதற்கு உவமை குறிச்சி புக்க மான் ஆகும். குறிச்சி என்று குறிஞ்சி நிலத்து ஊர் குறவர் வாழும் ஊர். மான் முல்லை நிலக்காட்டில் வாழும், அது மலைப் பாங்கான குறிச்சியில் குறவர் வாழும் குறிச்சியில் புகுந்தால் இயங்க முடியாமல் தடைப்படும். இது போலப் பாயிரம் கற்காமல் நூலைக் கற்கப்புகின் நூலைக் கற்கமுடியாமல் மாணவன் இடர்ப்படும் என்க. இளம்பூரணர், ஒரு இலக்கண நூலிற்கு அல்லது இலக்கியத்திற்கு எழுதப்படும் முகவுரை எல்லாம்; இன்றி யமையாச் சிறப்பிற்றாயும், அலங்காரமாதற் சிறப்பிற்றாயும் அமையுமாறு எழுதப்படுதல் வேண்டும் என்பதை அறிவுறுத்துகின்றார். அந்நூலானது எதிர் காலத்தில் சிறந்த இலக்கண நூற்களுக்கும், இலக்கியத்திற்கு அவற்றைப் படிப்பவர்க்கு நன்கு உதவிபுரியும் வகையில் அவற்றின்