பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

327 பொருளே பொருள்வகையாம்" என்பர். இவர் நூற்பாச் செல்லும் இயல்பில் உரைகூறிவிட்டு எந்தவிதமான விளக்கமும் ாடுத்துக் காட்டும் கூறவில்லை. பேராசிரியர் "இன்பமும் துன்பமும் புணர்தலும் பிரிதலும் ஒழுக்கமுமெனப்பட்ட இவை இழுக்காதவாற்றான் த்ெதிணைக்கு இதுபொருளென்று ஆசிரியன் ஒதிய உரிய பொருளன்றி, அவற்றுக்கெல்லாம் பொதுவாகப் புலவனால் செய்யப்படுவது பொருட்கூறெனப்படும்" என்று உரை கூறி, வகை' என்றதனால் பலவன்றான் வகைத்ததே பொருள் என்று கொள்க; அஃதின்றிச் செய்யுள் செய்தல் ஆகா தென்பது இதன் கருத்து. அவை, கைக வியாச் சென்று கண்புதையாக் குறுகிப் பிடிக்கை யன்ன பின்னகத் தீண்டித் தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ நாணொடு மிடைந்த கற்பின் வாணுதல் அத்தீங் கிளவிக் குறுமகள் மென்றோள் செறனசைஇச் சென்றவென் னெஞ்சே (அகநானூறு-9) என்றாற் போலச் செய்யுள் எய்தவன் தானே வகுப்பன வெல்லாம் கோடல்: இது பாலைப்பாட்டினுள் வந்ததாயினும் முல்லை முதலாயவற்றுக்கும் பொதுவாம் என்பது.பொதுமை என்பது எல்லாவுரிப் பொருட்கும் ஏற்பப் பலவேறு வகையாற் செய்தல்" என்று உரையும் விளக்கமும் எழுதி யுள்ளனர். நச்சினார்க்கினியர் பேராசிரியர் கருத்தையே பின்பற்றிக் கூறினாலும், இதனைப் புறத்திற்குங் கொள்க என்பர். பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் பொருள்வகை' என்பது திணைக்குரிய உரியபொருளன்று. புலவன் தானாகக் கற்பனை செய்து கூறுகின்ற பொருள்நெறியாகும் இது. இப்பொருள்வகை எல்லாவற்றிற்கும் பொதுவாகும். உரிப்பொருள் போல் திணைக்குரிமை பூண்டதன்று என்பர். இந்நூற்பாவிற்கு இளம்பூரணர் நூற்பாவின் வழியே சென்று சொற்படுபொருளைக் கூறி விட்டு விளக்கம்