பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 தராமல் சென்றுவிட்டார். பேராசிரியரும் நச்சினார்க் கினியரும் பொருள்வகை என்பது திணைக்குரிய உரிப் பொருளன்று புலவன் அகப்பொருள் புறப்பொருள்களை உணர்த்தும் திறன் என்பர். இன்பமும் இடும்பையும் என்ற தொல்காப்பிய நூற்பாவிற்குப் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் மேற் கண்டவாறு உரைகூறுவது ஒருவகையில் பொருந்தும். தொல்காப்பியர் செய்யுள் உறுப்பாகக் கூறும் திணை, கைகோள், கூற்று, கேட்போர், களன், காலம், பயன், மெய்ப் பாடு, எச்சம், முன்னம், பொருள், துறை என்னும் பன்னிரண்டில் முன்னம் துறை என்னும் இரண்டையும் ஒழித்து எஞ்சிய பத்தினையும் இறையனார் களவியல், திணையே கைகோள் கூற்றே கேட்போர் இடனே காலம் எச்சம் மெய்ப்பாடு பயனே கோளென் றாங்கப் பத்தே அகனைந் திணையும் உரைத்த லாறே என்று கூறுகின்றது. இப்பத்துள் தொல்காப்பியர் கூறிய பொருள், அல்லது பொருள்வகை என்பதைக் களவியல் கோள் என்று கூறுகின்றது. களவியலுரையாசிரியர், "கோள் என்பது ஒரு பாட்டினத்துப் பொருள் கொண்டு நிற்கும் நிலை. அஃது ஐந்து வகைப்படும். விற்பூட்டு விதலை யாப்பு பாசி நீக்கு கொண்டு கூட்டு ஒருசிறைநிலை என்றவற்றுள், இன்னதோர் பொருள் கொண்டு நின்றது இப்பாட்டு என அறிவது” என்பர். இது நிற்க வீரசோழியம் அகப்பாடல்கட்கு உரை கூறு மாற்றை இருபத்தேழாகக் கூறி, அவற்றுள் பத்தாவதாகக் கோள்' என்பதையும், இருபத்தேழாவதாகப் பொருள் அடைவு என்பதையும் கூறுகின்றது. அவற்றுள் கோள் என்பது பொருள்கோளாகும். இப்பொருள்கோளும் ஈற்றில் கூறிய பொருள் அடைவும் வெவ்வேறு என்பது வீரசோழிய நூலார் கருத்தாகும். அவ்விரண்டில் முதலிலுள்ள கோள் என்னும் பொருள்கோளானது ஒரு அகப்பொருள் பாட்டில் கொழுங்கொடி வள்ளி போல, முதலிற் பொருளிற் சிறந்தும், செழுங்குலை வாழையைப் போல, ஈற்றிலே பொருள்