பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 மன்மதன் சுப்பிரயோகம் விப்பிரயோகம் சோகம், மோகம் மரணம் என்றும் ஐந்து அம்பினை ஒருவரிடம் எய்திக் காமத்தை உண்டாக்குகின்றான். அவற்றுள் சுப்பிரயோகம் என்பது சொல் நினைப்பு, விப்பிரயோகம் என்பது வெய் துயிர்ப்புறுதல், சோகம் சோறுண்ணாமை வெப்பு, மோகம் மயக்கம் மொழிபல பிதற்றல், மரணம் அணங்கல் மயங்கல் அவற்றுள் முதற்கனையொழிய பிற்கணை நான்கும் வீசிய பொழுது மெய்ப்படப்பட்டு வருந்தி விளம்பலே மெய்ப்பாடு. அது 1. அக மெய்ப்பாடு, 2. புற மெய்ப்பாடு என இரு வகையாம்அவற்றுள் அகமெய்ப்பாடு 32. 1. விளர்ப்பு, 2. பசப்பு, 3. மெலிவு, 4. விதிர்ப்பு, 5. துளக்கம், 6. துயர்தல், 7. தும்மல், 8. சோர்தல், 9. வேர்த் தல், 10. வெருவுதல், 11. விம்முதல், 12. விரும்புதல், 13. ஒப்பி லாமை, 14. உருகுதல், 15. மயங்குதல், 16. மூரி, 17. உயிர்ப்பு, 18. மூர்ச்சினை, 19. முறுவல், 20. சாரிகை கடத்தல், 21. கழி கண்ணோட்டம், 22 இருந்துழியிராமை, 23இராகமிகழ்தல் 24. வருந்திக் காட்டுதல், 25. வாய்நளிையுறுத்தல் 26. சிந்தனை கூர்தல், 27. சேர்துயிலின்மை, 28. கண்டது மறுத்தல், 29. காட்சி விரும்பல், 30. உண்டி விரும்பாமை, 31. உரைத் தது மறுத்தல், 32. கண்ணிர் வழிதல், 33. கனவு ஒளி காண்டல், புறமெய்ப்பாடாவது அக்காமம் என்பது கருத்து வேறுபட்டு மற்றும் நகை முதலிய ஏழாகித் தன்னையும் கூட்ட எட்டாய் வருவது. அவை, 1. சிருங்காரம் இன்மை வனப்பு வளமை கல்வி 2. நகை மயக்கம் பெயர்ப்பு இகழ்வு நோக்கம் 3. வியப்பு தறுகண்மை புலமை பொருள் பண்பு 4. அச்சம் மாற்றலர் விலங்கல் மற்றவர் சேருதல் 5. வீரம் பகை செரு இகல் முனிவு 6. உட்கோள் ஐவகைக்குரவர் தேவர் மன்னர் 7. இரக்கம் வருத்தம் இகழ்வு வலியின்மை பெருமை 8. இழிப்பு நாற்றம் சுவை தோற்றம் ஊறு