பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பாலையும் வாகையும் தொல்காப்பியனார் வகுத்துக்கொண்ட அகனைந் திணையுள் நடுவுநிலைத்திணை என்று சிறப்பிக்கப்பட்ட பாலைத்தினையும் ஒன்றாகும். இதன் சிறப்பைக் கருதி நடுநாயகத்தினை என்கின்ற பொருளில் நடுவுநிலைத்திணை வறு பெயர் அமைக்கப்பட்டது போலும். இதற்குப் புறமாய்க் கருதப்பட்ட புறத்திணை வாகைத் திணையாகும். தொல்காப்பியனார் இப்பாலைத்திணைக்கு நிலம் பகுதி,தோதவில்லை. பிற்காலத்தே மதுரைக்காஞ்சியில் "பாலை சான்ற சுரம் சேர்ந் தொருசார்" என்று வருதலைக் கொண்டு நம்! பியகப்பொருள் என்னும் நூல் 'பாலை சுரனும் அா சார்ந்த இடத்தையும் இடமாகப் பெற்றுவரும்" என்று கூறுகின்றது. தொல்காப்பியனார் இருவகை வேனிலையும் பின் பளிக்காலத்தையும் பாலைத் திணைக்கு உரிமை செய் துள்ளார். ஒர்யாண்டில் மூன்று பெரும் பொழுதை அஃதாவது ஆறு திங்களைப் பாலை பெற்றுள்ளது. மாசியில் தொடங்கி இடைவிடாமல் மாசியும் பங்குனியும் சித்திரையும் வைகாசியும் ஆனியும் ஆடியும் ஆகிய ஆறு திங்கள் பாலைக்குரியன. ஒரு நாளின் கூறாகிய சிறுபொழுதுள் நண்பகல் ாவனும் சிறுபொழுது மட்டும் பாலைக்குரியது. முன்காலத்தே தமிழ்நாட்டு ஆடவரெல்லாம் தம் நாட்டினை விட்டு வேற்றுநாடு புக்குத் தொழில் செய்து பொருளிட்டும் ஆள்வினை உடையவராய் இருந்தனர். அவர் மாசித்திங்களில் தம் பதியை விட்டுப் பிரிந்து வெளிநாடு புக்கு ஆறு திங்கள்வரை வினைசெய்து பொரு -ாட்டினராய் கார்காலத் தொடக்கமாகிய ஆவணியில் தம் பதிக்கு வருவார். அவர் ஆவணி புரட்டாசி ஐப்பசி _ாதிகை மார்கழி தை வரை தம் வீட்டில் மனைவியுட