பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

339 மருதம் என்பன துன்பம் நிலையினவாயினும் பாலைத் திணையைப் பற்றிய இலக்கணங்களும் இலக்கியங்களுமே மிகுதியாக உள்ளன. தொல்காப்பியர் அகத்திணை ஏழிற்கும் பொதுவான இலக்கணங்களை அகத்திணை இயலில் ஐம்பத் தெட்டு நூற்பாக்காளால் கூறியுள்ளார். அவற்றுள் பாலைக்கு மட்டும் இருபத்துமூன்று நூற்பாக்களால் இலக்கணம் கூறப்படுகின்றது. சங்க இலக்கியம் என்று கூறப்படும் ாட்டுத்தொகை பத்துப்பாட்டுள் 2381 பாடல்கள் உள்ளன. இவற்றில் முக்காற்பாங்கு (1862) அகத்திணைப் பாடல் களாகவே உள்ளன. அவ்வகத்திணைப் பாடல்களுக்குள்ளும் பாதிக்கு மேல் பாலைத்திணைப் பாடல்களே உள்ளன. பாலைத்தினை ஒர் யாண்டில் பாதியான காலத்தைத் தனக்குரியதாக எடுத்துக்கொண்டாற்போலவே இலக்கியங் களிலும் மிகுதியான பங்கை எடுத்துக் கொண்டிருக்கிறது. பாலைக் கெளதமனார் பாலை பாடிய பெருங்கடுங்கோ என்னும் புலவரெல்லாம் பாலைத் திணையை அடையாகப் பெற்று விளங்குகின்றனர். ஆடவர் வினை செய்யப் பிரிவது பாலை திருவள்ளுவர் தான் சொல்லக் கருதிய பொருளில் மற்றொரு பொருளும் தோன்றும்படிக் கூறுவார். அவர் ஆள்வினையுடைமை என்னும் அதிகாரத்தே இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்துான்றும் தூண் என்றொரு குறளைக் கூறியுள்ளார். பரிமேலழகர் இக்குறட்கு " தனக்கு இன்பத்தை விரும்பானாகி வினை முடித்தலையே விரும்புபவன் தன் உறவினராகிய பாரத்திற்கு உண்டாகும் துன்பத்தினை நீக்கி, அதனைத் தாங்கும் துணாம்" என்று உரை எழுதிவிட்டு, இன்பமாகிய காரியத்தை விரும்பானாகி வினை முடித்தலாகிய காரணத்தையே விரும்புபவன், சுற்றத் தார்._நட்டாரது வறுமையும் தீர்த்து அவர்க்குஏமம் செய்யும் ஆற்றலை உடையனாம் எனவே தன்னைக் கூற வேண்டாவாயிற்று.