பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

343 தாவில் கொள்கை தத்தம் கூற்றைப் பாகுபட மிகுதிப் படுத்த லென்ப கேடில்லாத கொள்கையையுடைய தங்கள் தங்கள் வினைக் கூறுபாட்டைப் பகுப்புத் தோன்றச் செய்து மிகுதிப்படுத்தல் வாகைத்தினைப் பொருளாம் என்று இந்நூற்பா கூறுகிறது. வேந்துவிடு முனைஞர் என்று வெட்சிக்கும், வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென்று அடல்குறித்தன்று என்று வஞ்சிக்கும் உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பென்று உழிஞைக்கும், " மைந்து பொருளாக வந்த வேந்தனை அஞ்சுதகத்தலைச் சென்று அடல் குறித்தன்று என்று தும்பைக்கும் வேந்தனைத் தலைவனாக்கியது போல் வாகைத்திணைக்கு வேந்தனைத் தலைவனாக்கவில்லை. இங்கே தத்தம் என்றது அடுத்த நூற்பாவில் கூறும் ஏழு கூற்று மக்களையும் குறிக்கின்றது. எனவே, வாகைத்தினை என்பது மக்கள் சமுதாயம் அனைத்திற்கும் உரியதாகின்றது. இளம்பூரணர் பாலைக்கு வாகை புறனாயவாறு என்னை எனின்? என்று வினாவை எழுப்பிக் கொண்டு பாலையாவது ஒரு நிலனின்றி எல்லா நிலத்திலும் காலம் பற்றிப் பிறப்பது போல வாகையும் எல்லா நிலத்திலும், எல்லாக் குலத்திலும் காலம் பற்றி நிகழ்வதாதலானும்" என்று காரணம் கூறுவர். அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் ஐவகை மரபின் அரசர் பக்கமும் இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் மறுவில் செய்தி மூவகைக் கால்மும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும் நாலிரு வழக்கில் தாபதப் பக்கமும் பாலறி மரபில் பொருநர் கண்ணும் அலனநிலை வகையோடு ஆங்கெழு வகையால் தொகைநிலை பெற்றது என்மனார் புலவர் வாகைத்திணையில் மக்கள் சமுதாயத்தின் பல்துறைத் தொழில் வகைகளை எல்லாம் பார்க்கின்றோம். 1. பார்ப்பனர் சமுதாயத்தில் ஒதும் தொழிலும் ஒதுவிக்கும் தொழிலும் வேட்டல் தொழிலும் வேட்பித்தற்றொழிலும் ஈதல் தொழி