பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 லும் ஏற்றல் தொழிலும் நிகழும். 2. அரசர் சமுதாயத்தில் ஒதல் வேட்டல் ஈதலாகிய பொதுத் தொழிலும், படை வழங்குதல் குடியோம்புதல் என்னும் சிறப்புத் தொழிலும் நிகழும். 3. வணிகர் சமுதாயத்தில் ஒதல், வேட்டல், ஈதல் என்னும் பொதுத் தொழிலும், உழவு வாணிகம் நிரையோ ம்பல் என்னும் சிறப்புத் தொழிலும் நிகழும். 4. வேளாளன் சமுதாயத்தில் ஒதலாகிய பொதுத் தொழிலுடன் உழுதலும், ஏனைய தொழில் புரிதலும், பகடு புறந்தருதலும் பணி செய்தலும், விருந்து புறந்தருதலும் நிகழும். 5. அறிவன் தேயத்தில் வெயிற்காலம் மழைக்காலம் பனிக்காலம் என்னும் மூன்றுகாலத்திலும் நிகழும் வானத்தின் குறிப்புகளை ஆராய்ந்து உலக மக்களுக்கு உலகில் நிகழ்பெறும் உண்மைப் பொருள் நிகழ்ச்சி உரைத்தல் நிகழும். 6. தாபதப் பக்கத்தில் நீராடல், நிலத்திடைக் கிடத்தல், தோலுடுத்தல், சடைபுனைதல், எரியோம்பல், ஊரடையாமை, காட்டிற் கிடைப்பனவற்றை உணவாகக் கோடல், அதிதி பூசை முதலியன தவத்திற்கு உறுப்பாக நிகழும். 7. பால்அறி மரபின் பொருநர் பக்கத்தில் மல் வென்றி, ஏறுகோள் வென்றி, கோழி வென்றி, தகர் வென்றி யானை வென்றி பூழ்வென்றி, சிவல் வென்றி, கிளிவென்றி, பூவை வென்றி, குதிரைவென்றி, தேர் வென்றி, யாழ் வென்றி பிடி வென்றி முதலிய பொருதல் தொழிலில் வெற்றிகாண் நிகழ்ச்சி களெல்லாம் நிகழ்வுறும். இவை அனைத்து மக்களுக்கும் பொதுவாம். திவாகர நிகண்டு பண்பு பற்றிய பெயர்த்தொகுதியில் "வலனே கொற்றம் ஆடு வகை விசயம் புகலென ஆறும் வெற்றி" என்று கூறுகிறது. அதனால், இது உள்ளத்தின் குறிப்பாய்க் கருதப்பட்டுப் பெருமிதம் என்னும் மெய்ப் பாட்டுக்குரியதாகி வரும். தொல்காப்பியர் வாகையை ஏழு வகையாக் கூறிய தோடன்றிப் பின்னர் பதினெட்டுத் துறையாகவும் விரித்தோது கின்றார். அப்பதினெட்டுள் 1. பாசறை நிலை, 2. களவழிவாழ்த்து, 3. முன்றேர்க் குரவை, 4. பின்றேர்க் குரவை, 5. பெரும்பகை