பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

345 தாங்கும் வேல், 6. அரும்பகை தாங்கும் ஆற்றல், 7. வல் லாளர் பக்கம், 8. அவிப்புலி, 9. ஒல்லாரிடவயிற் புல்லிய பாங்கு என்னும் ஒன்பதும் மறத்திற்கு உரிய வாகையாகச் சான்றோர் பக்கமும் கடிமனை நீத்தபாலும் எட்டுவகை முதலிய அவையமும் கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமையும் இடையில் வண் புகழ் க் கொடைமையும் பிழைத் தோர்த்தாங்கும் காவலும் பொருளொடு புணர்ந்த பக்கமும் அருளொடு புணர்ந்த அகற்சியும் காமம் நீத்தபாலும் என்னும் ஒன்பதும் அறத்தின்பாற்பட்ட வாகையாகும். எனவே வாகை, மறம் அறம் என இருகூறுபட்டு விளங்குதலையும் காண்க அறப்பகுதியுள் கடிமனை நீத்த பாலும், கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமையும். இடையில் வண்புகழ்க் கொடைமையும் பிழைத்தோர்த் தாங்கும் காவலும் என்பவை இல்லறத்தின்பாற்படும். பொருளொடு புணர்ந்த பக்கமும், அருளொடு புணர்ந்த அகற்சியும் காமம் நீத்தபாலும் என்பவை துறவறத்தின்பாற்படும். எனவே வாகை இல்லறம் துறவறம் என்னும் இரண்டினையும் தன்பாற் கொண்டுள்ளது. எட்டுவகை நுதலிய அவையம் அவை என்னும் சொல் தமிழ்மொழியில் மிகப் பழங் காலத்திலிருந்தே பொருட்பெயராகவும் தொழிற்பெயராகவும் வழங்கி வருகின்றது. அது பொருட்பெயராக வருமிடத்து'அ' என்னும் சுட்டடியாகப் பிறந்த பலவின்பால் அஃறிணைப் பெயராகவும், உயர்திணையாகிய மக்கட்கூட்டத்தை உணர்த் தும் பெயராகவும் கொள்ளப்படும். தொழிற்பெயராக வரு மிடத்து அவைத்தல் அதாவது தீட்டுதல் (அரிசியைத் தீட்டுதல்) என்ற பொருளிலும் வரும். திருவள்ளுவர் திருக்குறளில் அவையறிதல் என்று ஒரதிகாரம் கூறுகிறார். அவர் அவ்வதிகாரத்தே நல்லவை என்றும் புல்லவை என்றும் இரண்டாகப் பகுத்துள்ளார். 'கூத்தாட்டவை என்ற குறளில் கூத்து நிகழுமிடத்தே வந்து குழுமியுள்ள மக்கட் கூட்டத்தையும் அவை என்றே கூறுகின்றார். வேத்தவை என்பது வேந்தனைத் தலைவனாகக் கொண்டு விளங்கும்