பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

347 அறியும் போது வாகைத்திணையின் சிறப்பு நமக்குப் புலனா கின்றது. வாகை பொது வாகை அரசர்க்கே உரித்தன்றி எல்லா மக்கட்கும் உரியதென்பதை, ஆள்வினை முதலாம் செய்கையும் நலனும் கைவலம் முதலாம் கல்வியும் ஆண்மையும் சால்பு முதலாம் பண்பும் ஈகையும் ஒழுக்கம் முதலாம் தவமும் அறத்துறையும் ஒருவரின் ஒருவர் வென்றி மிகுதியும் - வருவன வெல்லாம் வாகையென் னும்பெயர் 23, என்னும் திவாகர நூற்பாவால் உணர்ந்து கொள்ளலாம்.