பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 தொடங்கி விரவியலிறான அணிகளைக் கூறும் தண்டியலங்காரம் தன்மையிலிருந்து தொடங்கிப் பாவிகம் ஈறான அணிகளைக் கூறும். - இங்ங்னம் எழுந்த அணியிலக்கண நூல்கள் கூறும் அணியைப் பற்றிப் பேராசிரியர் கூறுவது கருதத்தக்கதாம். அவர் தொல்காப்பியம் உவம் இயல் கடைசியில் கூறுவன வருமாறு: இனி, இவ் உவமவியலில் கூறுகின்ற உவமங்களுள் சிலவற்றையும், சொல்லதிகாரத்தினுள்ளும் செய்யுளிய லுள்ளும் சொல்லுகின்றனவாகிய சில பொருள்களையும் வாங்கிக் கொண்டு, இவை செய்யுட்கண்ணே அணியாமென இக்காலத்தாசிரியர் நூல் செய்தாரும் உளர். அவை ஒரு தலையாகச் செய்யுட்கு அணி என்று இலக்கணம் கூறப்படா. என்னை? வல்லார் செய்யின் அணியாகியும் அல்லார் செய்யின் அணியன்றாகியும் வரும்; தாங்காட்டாய இலக்கணத்திற்கு சிதையாவழியும் என்பது என்னை? நாயகர்க்கு நாய்கள்போல் நட்பிற் பிறழாது கூஉய்க் குழாமுடன் கொட்கு - மாய்படை பன்றி யனையர் பகைவேந்தர் ஆங்கவர் சென்றெவன் செய்வர் செரு என்று உவம அணி தோன்றக் கூறியவழி நாயகர்க்கு நாய்கள் போல நட்பிற் பிறழாது நிற்கும் ஆய்படை என்பது வினையுவமம். பன்றியனையர் பகைவேந்தர் என்பதும் நாய்க்குப் பகையாகிய பன்றி போன்றவர் என்று கொள்ளப்பட்டு அவ்வேந்தர் பகைவராதலால் அவ்வாறு கூறும் உவமையும் விலக்கரிது. அவ்வாறு ஆயினும் மேற்கூறிய அஃது அணியெனப்படாது; உவமைதான் 'உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை" என்ற நூற்பாவின்படி உயர்ந்ததின்மையின் அஃது உவமைக் குற்றமன்றோ என்று கூறினால், "பேரூர் அட்ட கள்ளிற்கு ஒரில் கோயில் தேருமால் நின்னே" (300)