பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

359 வழிமொழிந்தொழுகப்பெறாத, போகம் வேண்டிப் பொதுச் சொல் பெறுகின்ற, இடம் சிறிதென்னும் ஊக்கம் இல்லாத, ஒடுங்கிய உள்ளத்தையுடைய, ஒம்பும் ஈகையினை யுடைய திங்களே! விலங்குசெலல் இல்லாத, பொழுதென வரையாத, புறங்கொடுத்து இறக்காத, மாறிவராத, மலைமறைந்து ஒளிக்காத, அகன்ற நிலப்பரப்பில் விளங்குகிற பகலிர வென்னும் எக்காலத்தும் விளங்குகின்ற சேரலாதனை நீ பொருளோடு ஒப்புமை மாறுபடவும் பொருளை எடுத்துக் கொண்டு உவமையோடு ஒப்புமை மாறுபடக் கூறப்படுவது என்றும் 'வையங்காவலர் என்னும் பாட்டில் முற்பகுதியும் பிற்பகுதியும் வேறுபடுதலில் வேறுபட வந்ததாயிற்று என்றும் கூறியுள்ளார். (தொல் - உவமவியல்,32) * "தாமரை போன்றது கை" என்றதில் தாமரை உவமை; கை பொருள் கைபோல் மலர்ந்தது தாமரை எனின் இது பொருளுவமையாகும். திங்கள் சேரலாதனை ஒவ்வாது என்றது உவம வாய்பாடு தோன்றக் கூறியதாம். சேரலாதன் திங்களை ஒவ்வான் என்ற இது பொருளுவம வாய்பாடாகும். சேரன் சூரியமரபில் பிறந்தவன். வெண்சுடர் வழித் தோன்றிய அரசனைத் தண்சுடரோடு பழிக்க வேண்டி இங்கே உவமை வாய்பாடேயன்றி பொருளுவமை வாய்பாடும் வந்துள்ளது. அப்பொருளுவமை பொருளுவமை போலின்றி உள்ளுறை உவமம் போல் குறிப்பால் பொரு ளுணருமாறு உள்ளது என்கின்றார். பேராசிரியர். வர் 'வையங்காவலர்' என்ம்ை гт h mוul இl புறநானூறறு பாடலுக்கு எழுதிய உரை, இவர் குறுந்தொகைக்கு எவ்வாறு உரை எழுதியிருந்தாரோ? அவ்வுரை கிடைக்காமற் போயிற்றே என்று நம்மையெல்லாம் வருந்த வைக்கின்றது. \ இலக்கியத்தைச் சுவைப்பதற்குப் பாயிரம் போன்ற விளக்கங்கள் ஒரு தனித்த பாட்டையேனும் அல்லது தொடர்நிலைப் பாடல்களையேனும் சுவைப்பதற்கு அவற்றைப் பற்றிய