பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

367 இவர்களில் இளம்பூரணரும், புலவர் குழந்தையும் மட்டுமே பொருளதிகாரம் முழுமைக்கும் உரை கண்டவர்கள். முன்னவர் காலத்தால் மூத்தவர். பின்னர் காலத்தால் பிற்பட்டவர். இருவருக்கும் உள்ள இடைவெளி பல நூறு ஆண்டுகள்! குழந்தையுரை காலமாற்றத்திற்கேற்பச் சில மாறுபாடுகளைக் கொண்டுள்ளது.இவரது உரையில் நூற்பாக்கள் இடம் மாற்றி வைக்கப்பட்டுள்ளன. பிறரது உரைகளில் காணப்படும் பொருளியலை இவர் உரையில் காண முடியவில்லை. மாறாகப் பொதுவியல் என்ற பெயரில் ஒர்இயல் அகத் திணையியலை அடுத்து வைக்கப்பட்டுள்ளது. இவர் வைப்பு முறைக்கேற்ப இவர் அமைத்துள்ள இயல் வரிசை பின்வரு மாறு: 1. அகத்திணையியல் பொதுவியல் தளவியல் மெய்ப்பாட்டியல் கற்பியல் புறத்திணையியல் உவமயியல்

செய்யுளியல் 9. மரபியல் உற்றுநோக்கும்போது தொல்காப்பியப் பொருளாதார அமைபபு குழந்த்ையுரையில் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக அமைகிறது. நச்சினார்க்கினியர் முதல் ஐந்து இயல்களுக்கும் செய்யுளியலுக்கும் உரை கண்டுள்ளார். ஆயினும் மு. இராக வய்யங்கார். தம் நூலில் நச்சர் முதல் ஐந்து இயல்களுக்கு மட்டுமே உரை கண்டுள்ளதாக மொழிவர். அச்சேறிய பொருளதிகாரப் பதிப்பிலே செய்யுளியலு க்குள்ள பகுதி நச்சினார்க்கினியர் இயற்றியதன்றிப் பேராசிரியர் இயற்றியதென்பது செந்தமிழ் வாயிலாக முன்னரே பிரசித்தமானது. இதுபோலவே இவ்வச்சுப் பிரதியிற் கண்ட மெய்ப்பாடு உவமம், மரபியல்களில்