பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 உரைப் பகுதிகளும் நச்சினார்க்கினி ய ர ன்றிப் பேராசிரியர் இயற்றிய தென்பது செந்தமிழ் வாயிலாக முன்னரே பிரசித்தமானது என்பது அவ்ர் கூற்று. பேராசிரியர் இறுதி நான்கு இயல் களுக்கு மட்டுமே உரை கண்டுள்ளார். அருணாசலம் பிள்ளை அவர்கள் முதல் இரண்டு இயல்களுக்கு அகத்திணை யியல் உரைவளம், புறத்திணையியல் உரைவளம் என்று பெயர்களில் உரை கண்டுள்ளார். இவர் தம் நூலில் தம் முன்னோரின் உரைகளைத் தொகுத்துக் கூறி அவற்றைத் தழுவியும் மறுத்தும் உரை வகுக்கின்றார். 'தொல்காப்பியம் தமிழ் இலக்கிய வரலாறு என்ற பெயரில் க. வெள்ளை வாரணன் தொல்காப்பியப் பொருளதிகாரம் முழுமைக்கும் பொருள் கூறுகின்றார். இவர் பெரும்பாலும் இளம்பூரணர் உரையையே தழுவி உரைக்கின்றார். க. ப. அறவாணன் தொல்காப்பிய அகத்திணையியல், புறத்திணையியல் உரை வேறுபாடுகளை ஆய்ந்து கண்டுள்ளார். பொருளதிகாரம் - விளக்கம் 'பொருள் உணர்த்தினமையாற் பொருளதிகாரம் என்று பெயர்த்தாயிற்று. பொருள் என்பது யாதோ எனின் மேற்சொல்லப்பட்ட சொல்லின் உணரப் படுவது. அது முதல், கரு, உரி என மூவகைப்படும். இது பொருளதிகாரமாயின் உலகத்துப் பொருள் எல்லாம் உணர்த்தல் வேண்டுமெனின் அது முதல் கரு உரிப்பொருள் எனத் தொகைநிலையான் அடங்கும். அவ்வாறு வகுக்கப்பட்ட பொருளை உறுப்பினாலும் தொழிலினாலும். பண்பினாலும் பாகுபடுத்தி நோக்க வரம்பிலதாய் விரியும், இக்கருத்தினாலே இவ்வாசிரியர் உலகத்துப் பொருள் எல்லாவற்றையும் முதல் கரு. உரிப்பொருள் என ஒதினார் என்க' என்பது இளம்பூரணர் காட்டும் விளக்கம். நிறுத்த முறையானே பொருளினது இலக்கணம் உணர்த்தினமையின் இது பொருளதிகாரம் என்னும்