பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 அணிகலன் அணிந்து பிரமசாரியாயிருப்பா னொருவனுக்குத் தானமாகக் கொடுப்பது). பிரசாபத்திலும் (மகட்கோடற்குரிய கோத்திரத்தார் மகன் வேண்டியவழி இருமுது குரவரும் இயைந்து கொடுப்பது). அவரிடம் (ஒன்றானும் இரண் டானும் ஆவும், ஆனேறும் வாங்கிக் கொடுப்பது), தெய்வம் (வேள்விக்கு ஆசிரியராய் நின்றார் பலருள்ளும் ஒருவர்க்கு வேள்வித்தி முன்னர்க் கொடுப்பது), கந்திருவம் (ஒத்த இருவர் தாமே கூடுங் கூட்டம்), அசுரம் (வில்லேற்றினாதல் திரிபன்றி யெய்தானாதல் கோடற்குரியனெனக் கூறியவழி அது செய்தாற்குக் கொடுத்தல்), இராக்கதம் (தலைமகள் தன்னினும் தமரினும் பெறாது வலிதிற் கொள்வது), பைசாசம் (களித்தார் மாட்டுத் துயின்றார் மாட்டுங்கூடுதல்) என்னும் இவற்றை உரையாசிரியர் குறித்துச் செல்கின்றார். இந்த எட்டனுள் காந்தருவமே தொல்காப்பியனார் கூறும் காமக்கூட்டம் என்பர் உரையாசிரியர். களவின் வகைகள் காமக்கூட்டம் எனப்படும் இக்களவு காமப்புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், பாங்கியிற் கூட்டம் என நான்கு வகைப்படும் என்பதைத் தொல்காப்பியனாரின், ‘காமப் புணர்ச்சியும் இடந்தலைப்பாடும் பாங்கொடு தழாஅலுந் தோழியிற் புணர்வுமென்ற ஆங்க நால்வகையினும்,அடைந்த சார்வொடு மறையென மொழிதல் மறையோர் ஆறே' என்ற செய்யுளியல் நூற்பா கிளத்துகின்றது. காமப் புணர்ச்சியாவது ஊழ் கூட்டத் தலைமகனும் தலைமகளும் நெஞ்சங் கலந்து ஒன்றுபடும் நிலை, நெஞ்சங் கலந்த இருவரும் காதலராய் வழித் தலைநாட் கண்ட இடத்திலேயே தொடர் நாளும் சென்று கண்டு கூடுதல் இடந்தலைப் பாடு, தலைமகன் தலைமகளைத் தன் பாங்கன் துணையாகக் கொண்டு கூடுவது பாங்கற் கூட்டம், பாங்கியிற் கூட்டம் தோழியின் உதவியால் தலைமகன் தலைமகளைப் பெற்று மகிழ்வது. நம்பியக பொருள் ஆசிரியர் இக்களவு நெறியைப் பதினேழு வகைகளாகப் பகுத்துக் காட்டுகின்றார்.