பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/395

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

387 தொல்காப்பியனார் களவின் வகைகளாக இவற்றைக் குறித்த போதும் இந்த முறையில் வைத்து நிகழ்ச்சிகளை விளக்குவதில்லை. பொதுவாக இவர் தலைமகன் கூற்று, தலைமகள் கூற்று, தோழி கூற்று என்ற கூற்று வகையாலேயே விரித்துச் செல்கின்றார். எனவே இவற்றைப் பயிலுவோரே. உய்த்துணர வேண்டியிருக்கின்றது. களவில் - தலைமக்கள் தலைமகனும் தலைமகளும் களவில் ஈடுபடுதற்கு விதியே காரணம் என்பர் தொல்காப்பியனார். விதி கூட்டக் கூடுபவராகத் தலைமக்கள் திகழ்ந்தபோதும் அவர்கள் இருவரும் பிறப்பு, குடிமை, ஆண்மை, ஆண்டு, உருவு, காமம், நிறை, அருள், உணர்வு, திரு என்றவற்றால் ஒத்திருத்தல் வேண்டும். தலைமகன் தலைமகளை விட மிக்கவனாக இருந்தாலும் நீக்கப்பட மாட்டாது என்று கூறுகின்றார். 'ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றி உயர்ந்த பால தாணையின் ஒத்த கிழவனும் கிழத்தியுங் காண்ட மிக்கோ னாயினுங் கடிவரை யின்றே என்பது நூற்பா. இவ்வாறு பாலது ஆணையின் காரணமாக ஒருவனும் ஒருத்தியும் காணும்போது தலைமகள் சிறந்தவளாக இருக்குபோது மட்டுமே தலைமகனுக்கு ஐயம் நிகழும். இழிந்தவளாக இருக்கும்போது இழிநிலையே முன்னர்த் தோன்றும் ஆதலின் ஐயம் நிகழ வழியில்லை. இந்த ஐயம் தலைமகன்மாட்டு மட்டுமே நிகழும், தலை மகள்மாட்டு நிகழாது. இதனை. 'உயர்மொழிக் கிளவி உறழுங் கிளவி ஐயக்கிளவி ஆடுஉவிற்கு உரித்தே' என்ற நூற்பாவினால் தெளியலாம். இவ்வாறு தலைமக னிடத்தே தோன்றும் ஐயத்தை, வண்டு, இழை, வள்ளி, பூ, கண், அலமரல், இமைப்பு, அச்சம் என்றின்ன பிறவும் கருவியாகிக் களையும் பான்மையினவாகும். ஐயம் நீங்கிய வழி தெளிவு பிறக்கும். அப்போது தலைமகன் தன் காமக்