பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 கொடுப்பக் கொண்டு நாடறி நன்மண வதுவையயர்ந்து இருவரும் ஒருமனப்பட்டு இல்வாழ்க்கை நடாத்துதலே ஆகும். கற்பு என்ற சொல் இல்லறம் என்ற பொருளில் தொல்காப்பியத்தில் பலவிடங்களில் பயின்று வருகின்றன. கற்பு என்பதற்கு நச்சினார்க்கினியர் பின்வருமாறு விளக்கம் கூறுவர். 'கற்பாவது தன் கணவனைத் தெய்வமென்று உணர்வதோர் மேற்கோள்', 'கொண்டானின் சிறந்த தெய்வம் இன்றெனவும், அவனை இன்னவாறே வழிபடுக எனவும் இருமுதுகுரவர் கற்பித்தலானும் அந்தணர் திறத்தும், சான்றோர் தேத்தும், ஐயர் பாங்கினும், அமரர்ச் சுட்டியும் ஒழுகும் ஒழுக்கம் தலைமகள் கற்பித்தலானும் கற்பாயிற்று' "இவளை இன்னவாறு பாதுகாப்பாய் எனவும்.இவற்கு இன்னவாறே நீ குற்றேவல் செய்தொழுகெனவும் அங்கியங் கடவுள் அறிகுறியாக மந்திர வகையாற் கற்பிக்கப்படுதலின் அத்தொழிலைக் கற்பென்றார். கற்பின் வகைகள் தமர் கொடுப்பக் கொண்ட இல்லறவொழுக்கமானது மகிழ்தலும், புலத்தலும், ஊடலும், ஊடல், தீர்தலும், பிரிதலும், புணர்தலும் என்னும் இவற்றொடும் கூடிவரும் என்பதனைத் தொல்காப்பியனாரின் 'மறை வெளிப்படுதலுந் தமரின் பெறுதலும் இவைமுத லாகிய இயனெறி திரியாது மலிவும் புலவியும் ஊடலும் உணர்வும் பிரிவொடு புணர்ந்தது கற்பெனப் படுமே' என்ற செய்யுளியல் நூற்பா நவில்கின்றது. அகப்பொருள் விளக்க ஆசிரியர் நாற்கவிராச நம்பியார் இவ்வாழ்க்கையின் வகைகளாகக் கிழவோன் மகிழ்ச்சி, கிழத்தி மகிழ்ச்சி, செவிலி மகிழ்ச்சி, பாங்கி மகிழ்ச்சி என்பவற்றைக் காட்டுகின்றார். நம்பியார் கூறும் இல்வாழ்க்கை தொல்காப்பியனாரின் மலிவு என்ற வகைக்குள் அடக்கி விடுகிறது. புலவு. ஊடல், ஊடல் உணர்வு என்ற மூன்றும் நம்பியின் பரத்தையிற்