பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 போலும் பொருள்தொடர்நிலைப் பாடல்கள் (காவியங்கள்) எழுந்த பிற்காலத்திலே எழுதப்பட்ட யாப்பருங்கலம் முதலியவை திணை முதலியை உறுப்புக்களை ஒதாது விட்டமையும் ஒர்க வரலாற்று முறைப்படிப் பார்த்தால் முதன் முதலில் தனிப்பாடல்கள்தாம் தோன்றியிருக்க முடியும். அவற்றைப் பிற்காலத்தார் முறைப்படுத்தித் தொகுத் திருப்பார்கள். தனிப்பாடல்கள் தோன்றிய வெகு காலத் திற்குப் பின் தொடர்நிலை இலக்கியங்கள் தோன்றியிருக்க வேண்டும். தனிப்பாடல்கள் முழுவரலாற்றையோ, முழுநிகழ்ச்சியையோ கூறமுடியாது. ஏதோ ஒரு நிகழ்ச்சியை மட்டும் அது புனைந்து கூறும் தனிப்பாடல்களில் இக்குறையைப் போக்குவதற்காகப் பின்னர் காவியங்கள் தோன்றலாயின. தொல் காப்பியர் தம் நூலுள் பொருளியலில் இரண்டாவது நூற்பாவாக, நோயும் இன்பமும் இருவகை நிலையில் காமம் கண்ணிய மரபிடை தெரிய எட்டன் பகுதியும் விளங்க ஒட்டிய உறுப்புடை யதுபோல் உணர்வுடை யதுபோல் மறுத்துரைப் பதுபோல் நெஞ்சோடு புணர்த்தும் சொல்லா மரபின் அவற்றொடு கெழிஇச் செய்யா மரபின் தொழிற்படுத் தடக்கியும் அவரவர் உறுபிணி தமபோற் சேர்த்தியும் அறிவும் புலனும் வேறுபடி நிறீஇ இருபெயர் மூன்றும் உரிய வாக உவம வாயிற் படுத்தலும் உவமம் ஒன்றிடத் திருவர்க்கும் உரியபாற் கிளவி இந்நூற்பா தலைவனும் தலைவியும் கூறும் பகுதிக்கிளவி என்னும் பாற்கிளவி, இன்ன இன்னவகையில் வரும் என்பதைக் கூறவந்தமையாலும், இலக்கிய வகையையும் அறிவிக்கின்ற நூற்பாவாகவும் உள்ளது. எந்த இலக்கியத்தையும் துன்பியல் இலக்கியம், இன்பியல் இலக்கியம் என்ற இரண்டு பகுப்புள் அட்க்கலாம்