பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 _பதை 'நோயும் இன்பமும் இருவகை நிலையில் என்ற பகுதி அறிவிக்கின்றது. தொல்காப்பியர் மற்றோரிடத்தில் 'வெபமும் இடும்பையும் (செய்யுளில் - 200) - என்றும் குறிப்பிட்டுள்ளார். இவ்வின்பமும் இடும்பையும் காங்கண்ணிய மரபிடை வரும். காமங் கண்ணிய மரபு தொல்காப்பியத்தை மேற்போக்காகப் படிப்பவர் தொல் காப்பியர் அகத்திணை இயலால் காமத்தையும், புறத்திணை ()யலால் போரினையும் கூறியுள்ளார், என்று கூறி விடுகின்றனர். ஆனால், தொல்காப்பியர் மக்கள் மனத்தெழும் காமம் என்ற பண்பிலிருந்தே உலகத்திலுள்ள எல்லாச் செயல்களும் தோன்றுகின்றன என்று கருதுகின்றார். அவர் கூறும் முறையைக் கூர்ந்து உணரவேண்டும். அவர் அகத்திணையியலின் தொடக்கத்தே காமம் என்னும் ஒன்றை கைக்கிளை ஐந்திணை பெருந்திணை என்னும் ஏழு பிரிவாகப் பிரித்துக் கொள்ளுகின்றார். அவற்றுள், கைக்கிளை என்பது ஒருபாற் காமமாகும். தலைவன் தலைவி என்ற இருபாலருள் ஒருவர் காமம் நுகரும் பருவத்தினராய் மற்றொருவர் காமக்குறிப்பமையாத இளம் வயதினராய் இருப்பர். ஐந்திணை என்பது புணர்தல், பிரிதல், இருத்தல், இயங்கல், ஊடல் என்னும் ஐந்து பிரிவாய் வழங்குதற்குரிய, குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் என்னும் பெயர் பூண்ட இருவர்பாலும் ஒத்த அன்புடைக் காம மாகும். பெருந்திணை என்பது பருவம் முதிர்ந்தவரிடத்தே தோன்றும் ஒவ்வாக் காமமாகும். ஒருவரை ஒருவர் விரும் பாமையும், வரம்பிற்கு மேற்பட்ட காமமும் இதன்பாற்படும். கைக்கிளை முதலான மூன்றினையும் முறையே ஒருபாற்காமம், ஒத்த காமம், ஒவ்வாக் காமம் என்று கூறுவர். அகத் திணையியலில் இம் மூன்று காமத்தைப் பற்றிய செய்தி களையே கூறியுள்ளார். இதன்பின், புறத்திணையியலால், புறத்திணையை உணர்த்தத் தொடங்கிய ஆசிரியர், இயல் தொடக்கத்தே புறத்திணை இத்தனை என்று கூறாமல், டிழென்று மேலே கூறிய அகத்தினை மருங்கின் அரில்தப உணர்ந்தோர் புறத்திணை இலக்கணம் திறம்படக் கிளப்பின் என்று தொடங்கி,