பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/413

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 பொதுவாக வாகை, காஞ்சி, பாடாண் என்னும் மூன்று திணைகளில் வாகைத் திணையும், காஞ்சித்திணையும் புலவன் நாட்டு மக்களைக் குறித்து அவர்தம் பலவகைச் செயலைப் பாடுவனவாகவும், பாடாண் திணை நாட்டு மக்கள் அனைவரையும் நோக்கி எழுந்ததாகவும் கொள்ளக் கிடக்கின்றன. நிறைவுரை இவ்வாறாகத் தொல்காப்பியனார் தம் பொருளதி காரத்தின் ஒன்பது இயல்களுள் முதல் ஐந்து இயல்களில் அகத்திணையியல், பொருளியல் என்னும் இரண்டு இயல்களில் அகவொழுக்கத்திற்குரிய பொதுவான இலக் கணங்களையும், களவியலில் களவு என்னும் கைகோளினை யும், புறத்திணையியலில் புறப்பொருள் பற்றியும் மிக விரிவாகப் பேசுகின்றார். |