பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/441

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432 அசுரம் இராக்கதம் பைசாசம் என்றே உரை கூறினார்.அசுரம் முதலானவற்றைப் பின்னர் மூன்று என்றும் பிரமம் முதலான நான்கும் பெருந்திணை என்று கருதியிருப்பின் முன்னர் நான்கும் என்றே கூறியிருக்க வேண்டும். வடமொழி யாளர் எட்டு மணத்தைக் கூறுங்கால் பிரமம் முதலான நான்கையும் முன்னர் வைத்தும் அசுரம் முதலான மூன்றினையும் பின்னர் வைத்துத்தான் கூறுகின்றார்கள். அதனால் முன்னைய மூன்றும் அகரம் முதலியனவென்றும் பின்னைய நான்கும் பிரமம் முதலியன என்றும் கூறுதற்குப் பொருத்தமேயில்லை. அதுவுமன்றித் துஞ்சினாரோடும் மயங்கினாரோடும் களித்தாரோடும் செத்தாரோடும் விலங்கி னோடும் இழிதரு மரபில் யாருமில்லா ஒருசிறைக்கண் புணர்ந்தொழுகும் பைசாச மணத்திற்கெல்லாம் பாங்கன் நிமித்தம் ஆதல் இல்லையாதலின் இவ்விருவர் உரையும் பொருந்துவதாக இல்லை. பாங்கன் நிமித்தம் முதலான நூற்பாக்களுக்கு இரண்டு உரையாசிரியர்கள் கூறும் உரை அவர்கள் ஊகமே அன்றி வேறில்லை என்பது நமக்குத் தெளிவாக விளங்குகிறது. அதனால் நாமும் நம் ஊகத்தைப் பயன்படுத்தித் தமிழ் மரபு கெடாமல் உரைகூறுவதில் பிழையொன்றும் இல்லையெனக் கருதுகிறேன். தமிழர் மணம் தமிழ் மணம் நிகழ்ந்து வந்தது. இப்பன்னிரண்டும் பாங்கனை நிமித்தமாக உடையன. அப்பன்னிரண்டில் முதல் மூன்றும் கைக்கிளைக் குறிப்பினையுடையன. நடுவண் ஐந்தும் யாழோர் மணத்தைப் போன்றன. ஈற்றில் கூறிய நான்கும் பெருந்திணையைச் சார்ந்தன. இவை வட மொழியாளர் கூறும் எட்டு மணத்திலும் வேறுபட்டவை யாகும்.