பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/443

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 முல்லையும் வஞ்சியும் முல்லை என்ற அக ஒழுக்கத்திற்கு இயைந்த புற ஒழுக்கமாக வஞ்சி ஒழுக்கம் திகழ்கிறது. வஞ்சி எனப் பட்டதற்குக் காரணம் கூறவரும் இளம்பூரணர் "காடுறை உலகமாகிய முல்லைப்புறம் மண்நசை வேட்கையால் எடுத்துச் செலவு புரிந்த வேந்தன்மேல் அடல் குறித்துச் செலவு புரிதலான் அவ்விருபெரு வேந்தரும் ஒருவினையாகிய செலவு புரிதலின் அது வஞ்சி என ஒரு குறி பெற்றது" எனக் கூறுகின்றார். இவற்றின் இயைபு பற்றிக் குறிக்கின்ற நிலையில், "மாயோன் மேய காடுறை உலகமும் கார் காலமும், முல்லைக்கு முதற்பொருளாதலாலும் பகைவயிற் சேறலாய வஞ்சிக்கு நிழலும் நீருமுள்ள காலம் வேண்டு மாதலானும், பருமரக் காடாகிய மலைசார்ந்த இடம் ஆகாமையானும் அதற்கு இது சிறந்ததென்க' எனக் குறிக்கின்றார். தலைவி தலைவனைப் பிரிந்து காட்டின் நடுவே அமைந்த தன் மலைக்கண் இருப்பதுபோலத் தலைவனுக்குத் தலைவியைப் பிரிந்து பகைவர் நாட்டிற்கு அரணான காட்டின்கண் அமைந்த பாடிவீட்டில் தங்கி இருப்பான். ஆதலால் முல்லையும் வஞ்சியும் தம்முள் இயைந்து காணப்படுகின்றன. இம் முல்லைப்பாட்டில் வஞ்சித் திணை ஒழுக்கம் இயைந்து நிற்றலைக் காண்போம். முல்லையில் வஞ்சி வஞ்சிதானே முல்லையது புறனே என்ற தொல்காப்பிய நூற்பாவிற்கு ஏற்றபடி முல்லை என்னும் அகத்திணைக்கு இயைந்த புறத்திணை ஒழுக்கமான வஞ்சி முல்லைப்பாட்டின் இடையில் அமைவுறப் பொருந்தி வருகிறது. தலைவியின் இருப்பினையும், கார்காலத்தில் வருவதாகக் கூறிச்சென்ற தலைமகனின் தேர்காணாமல் வருந்துகின்ற பிரிவுத் துயரினையும், திறம்படக் கூறி, தலைமகன் தங்கி யிருக்கும் பாசறையின் அமைப்பினையும் அங்கு நிகழும் செயல் களையும் பொருத்தமுற விளக்குகின்றார். முதல் 28 அடிகளில் முல்லைத்திணை ஒழுக்கத்தினையும், 24-வது