பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/447

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

438 மறவரின் அரண்கள் பாசறைக்கண் பல்வேறு மறவர்க்குரிய அரண்கள் இருந்தமையைக் கூறுகின்ற ஆசிரியர் நப்பூதனார் அவை அமைந்த திறத்தை விளக்குகின்றார். காவிக் கல்லிலே தோய்த்து உடுத்த உடையை உடையவனும், முக்காலை உடையவனுமாய அந்தணன் அம்முக்கோலை நட்டு அதன் மேல் அவ்வுடையை இட்டுவைத்த தன்மைபோல மறத்திலும் அறம் வழுவாத போரிலே வெந்திற்று ஓடாமைக்குக் காரணமான வலிய வில்லைச் சேர ஊன்றி அவற்றின்மேல் துணிகளைத் தொங்கவிட்டுக் கூட்டமாக அரண்களை அமைத்தனர் எனக் கூறுகின்றார். இதனை, கல்தோய்த் துடுத்த படிவப் பார்ப்பான் முக்கோல் அசை நிலை கடுப்ப நற்போர் ஓடா வல்வில் தூவி நாற்றிக் கூடங்குத்திக் கயிறு வாங்கிருக்கை பந்தலைக் குந்தம் குத்தில் நிரைத்து வாங்குவில் அரணம் அரவ மாக வேறு பல் பெரும்படை - முல்லை 37-43 என்ற பகுதியால் உணரலாம். மன்னன் இருக்கை இவ்வரண்களுக்கு நடுவே மன்னனின் தனி இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. வில்லரண்களில் மதில் திரையை வளைத்து அரசனுக்கென்று தனிக்கோயில் அமைக்கப் பட்டுள்ளது. இக்கோயிலில் உள்பகுதியில் குறுந்தொடி முன்கைக் கூந்தலஞ் சிறுபுறத்து மங்கையர் கச்சிலே வாளைப் பூண்டவராம் நெய்யினை உமிழ்கின்ற திரிக் குழாயினால் பாவையினை கையிலே அமைந்த விளக்கின் சுடர் குறையுந்தொறும் திரியைக் கொளுத்தி எரிக்கின்றனர். .......... நாப்பின் வேறோர் நெடுங்காழ்க் கண்டம் கோலி யகநேர்பு குறுந்தொடி முன்கைக் கூந்தலஞ் சிறுபுறத்து இரவுபகற் செய்யும் திண்பிடி யொள்வாள்