பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/448

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

439 விரவிரிக் கச்சிற் பூண்ட மங்கையர் நெய்யுமிற் சுரையர் நெடுந்திரிக் கொளி இக் கையமை விளக்கம் நந்துதொறு மாட்ட - முல்லை. 43-49 மெய்க்காப்பாளர் இவ்வாறு பாசறையின்கண் மகளிர் இருந்தமையை உணர்த்தியவர் அடுத்து மன்னன் மெய்க்காப்பாளர் (Ֆէք இருந்தமையைப் புலப்படுத்துகின்றார். யானை, குதிரை முதலியன உறங்கலின் அவற்றின் கழுத்தில் கட்டப்பட்ட மணியோசை அடங்கிய நடுயாமத்தில் புனலிபூத்த அசைகின்ற சிறு தூறுகள் துவலையோடு வருகின்ற காற்றிற்கு அசைந்ததைப் போன்று துகில் முடித்துப் போர்த்த துங்கல் ஓங்குநடைப் பெருமூதாளர் காவலாகச் சுற்றி நிற்கின்றனர் என்பதை, நெடுநா ஒண்மணி நிழத்திய நடுநாள் அதிரல் பூத்த ஆடுகொடிப் படாஅர் சிதர்விரல் அசைவளிக் கசைவந்த தாங்குத் துகில்முடித்துப் போர்த்த தூங்கல் ஓங்குநடைப் பெருமூதாளர் ஏமம் சூழ - முல்லை. 50-54 என்ற முல்லைப் பகுதிவழி உணர்த்துகின்றார் ஆசிரியர். நாழிகைக் கனக்கர் இவ்வாறு மன்னனின் தனி இருக்கையில் குறுந்தொடி மகளிரும்,பெருமூதாளரும் மட்டுமின்றி எடுத்து காரியம் இனிதே நிறைவுறப் பொழுதினைக் கண்டு கூறும் மெய்யறி வுடையவர்களும் ஆங்கு இருந்தமையை, பொழுதளந் தறியும் பொய்யா மாக்கள் தொழுதுகாண் கையர் தோன்ற வாழ்த்தி எறிநீர் வையகம் வெளிஇய செல்வோய்நின் குறுநீர்க் கன்னல் இனித்தென் றிசைப்ப - முல்லை, 55-58 என்ற முல்லைப் பகுதி உணர்த்துகின்றது.