பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 அகத்தினை இன்பம் பற்றிவந்த வெகுளி வெய்ய போல முயங்குதி முளையெழத் தெள்வர்த் தேய்த்த செவ்வேல் வயவன் மலிபுனல் வாயில் இருப்பை அன்னஎன் ஒலிபல் கூந்தல் நலம்பெறப் புனைந்த முகையவிழ் கோதை வாட்டிய பகைவன் மன்யான் மறந்தமை சிலனே (நற்றிணை 216) அகத்தினை இன்பம் பற்றி வந்த உவகை பாம்பனைச் செறிய முழங்கி அலனேர்பு வான்தளி பொழிந்த காண்பின் காலை அணிகிளர் கலாவம் ஐதுவிரித்தியலும் மணிபுலா எருத்தின் மஞ்ஞை போலநின் வீடுபெய் கூந்தல் வீசுவளி உறழ ஏகுதி மடந்தை எல்லின்று பொழுதே வேய்பயில் இறும்பின் கோவலர் யாத்த ஆவண் தெள்மணி இயம்பும் உதுக்காண் தோன்றும் எம் சிறுநல் லூரே (நற்றிணை 264) அகத்தினை நோய் பற்றிய அழுகை. இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை சுவைத்தோ றழுந்தன் மகத்துமுகம் நோக்கி நீரொடு நிறைந்த ஈரிதழ் மழைக்கண் என் மனையோள் எவ்வம் நோக்கி நினை.இ நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண (புறநானூறு 164) புறத்திணை - நோய்பற்றிய இளிவரல் தொடித்தலை விழுத்தண் டுன்றி நடுக்குற்று இருமிடை மிடைந்த சிலசொல் பெருமூ தாளரேம் ஆகிய எமக்கே (புறநானூறு)