பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 இலக்கியப் பாகுபாடு 'தமிழில் காணப்படும் இலக்கியப் பாகுபாடு என்ற கட்டுரையை எழுதுவதற்கு முன்பு இலக்கியங்களைப் படைப்பதற்குக் கருவியான நூல்கள் இருந்தனவா என்பதைப் பற்றி ஆராய்வோம். கருவி நூல் என்று இங்கே கருதுவது இலக்கண நூலேயாகும். இலக்கண நூலுக்குப் புலன்' என்று தொல்காப்பியர் காலத்தில் பெயர் இருந்திருக்கிறது. தொல்காப்பியப் பாயிரம் முந்து நூல்கண்டு முறைப்பட எண்ணிப் புலம் தொகுத்தோன் தொல்காப்பியன்' என்று கூறுகின்றதை நோக்குக. தொல்காப்பியரே 'புலன்நன்கு உணர்ந்த புலமையோர், (அகத்திணையியல் 14) புலன் உணர்ந்தோர் (செய்யுளியல் 233) என்று கூறுகின்றனர். இலக்கணத்தைப் புலன் என்று குறித்தமைக்கு ஏற்ப அவ் விலக்கண நெறியைக் கொண்டு செய்யப்படும் இலக் கியத்தைப் புலன்நெறி வழக்கம் என்னும் பெயரால் தொல் காப்பியர் குறிப்பிடுகிறார். புலன்நெறி வழக்கம் 'புலன்' என்ற சொற்குப் பொருள்களைப் புலப்படச் செய்யும் அறிவு என்பது பொருள். அச்சொல் இலக்கண நெறிகளைப் புலப்படுத்துகின்ற இலக்கண நூலுக்கும் பெயராக வருகிறது. அவ்விலக்கண நூல்வழி நின்று இயற்றப்படும் இலக்கியங்களைத் தொல்காப்பியர் புலனெறி வழக்கம் என்று குறிக்கின்றார். இதற்குச் செய்யுள் வழக்கம், நூல்நெறி வழக்கம் என்ற பெயரும் உண்டு. புலன் என்ற பண்புப்பெயர் பண்புக்கு ஆகுபெயராக வந்தது என்று கருதினால் புலன் - புலவர்; புலன்நெறி வழக்கம் - புலவர் ஆற்று வழக்கம் என்றும் ஆகும். தொல்காப்பியர் 'நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறு, புலவர் ஆறு என்று கூறியுள்ளனவற்றையும் நோக்குக. எனவே புலனெறி வழக்கம் என்றதை, நூல்நெறி வழக்கம் என்றும், அந்நூலினை உணர்ந்த புலவராற்று வழக்கம் என்றும், இருவகையாகப் பொருள்கொள்ளலாம். தொல்காப்பியர் காலத்திலும் அதற்கு