பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பரிபாடலாலும் புலனெறிவழக்கப்படுதலாம் என்பதே அந்நூற்பாவின் பொருளாகும். இளம்பூரணர் மேலே கூறியுள்ள விளக்கத்தில் நாடக வழக்கத்திற்குச் சுவைபட வருவனவெல்லாம் ஓரிடத்து வந்தனவாகத் தொகுத்துக் கூறுதல் என்பதும் உலகியல் வழக்கத்திற்கு உலகத்தார் ஒழுகலாற்றோடு ஒத்து வருவது என்பதும் பொது விளக்கமாகும். - இலக்கண நூலின்நெறிமுறைப்பட அகப்பொருள் புறப்பொருள் செய்திகளை நாடக வழக்கத்தினாலோ உலகியல் வழக்கத்தினாலோ புலவன் செய்யுள் செய்வது புலனெறி வழக்கமாம். அதனைச் செய்யுள் வழக்கத்தில் ஒரு பகுதி என்றுதான் கூறல் வேண்டும். திராவிடப் பிரகாசிகை என்னும் தமிழ் வரலாறு நூல் எழுதிய சிவத்திரு சபாபதி நாவலர் அவர்களும் செந்தமிழ் வழக்கு என்னும் தலைப்பின்கீழ் செந்தமிழ் வழக்கு, உலகியல் வழக்கும் புலனெறி வழக்கும் என இரண்டு வகைப்படும். உலகியல் வழக்கெனினும் உரையெனினும் நடையெனினும் ஒக்கும். புலனெறி வழக்கெனினும் செய்யுள் வழக்கெனினும்-- ஒக்கும் என்று எழுதியுள்ளார். ஆனால், தொல்காப்பியர் புலனெறி வழக்கத்தினையும் வாய்மொழியிலக்கியத்தையும் செய்யுள் என்னும் பொதுப்பெயரால் குறித்தலால் புலனெறி வழக்கினைச் செய்யுளில் ஒரு பகுதி என்றுதான் கொள்ள வேண்டும். செய்யுள் வகை பிற்கால இலக்கண நூலார் செய்யுளைப் பா என்றும் பாவினம் என்னும் இரண்டு வகையாகப் பிரிப்பர். செய்யுள் தாமே மெய்பெற விரிப்பின் பாவே பாவினம் எனவிரண்டாகும் என்பது (செய்யுள் இயல் - 1) யாப்பருங் கலம். ஆனால் தொல்காப்பியர், செய்யுளை எழுநிலமா யெழுந்த பாட்டும், உரையும், நூலும், வாய்மொழியும், பிசியும், அங்கதமும், முதுசொல்லும் என்னும் எழுவகை யாகப் பிரிக்கின்றனர். 'பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே அங்கதம் முதுசொலோ டவ்வேழ் நிலத்தும்