பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 உவமை மிக அரிய உவமையாகும். அடுத்தது ஒத்து என்ப தாகும். ஒத்தபொருளைக் கூறுவதனால் ஒத்து என்பது காரணப்பெயர். ஒத்த இனமான மணிகளை முறையறிந்து வரிசையாக வைத்தல்போல ஓரினமான பொருளை முறை யறிந்து ஒருவழி வைப்பது ஒத்தாகும் என்பர் (செய். 163). இங்கே கூறிய நேரினமணியை நிரல்பட வைத்தல் என்பதும் அரிய உவமையாகும். ஒன்றன் இலக்கணங்கள் பல திறத்தால் பிரித்துக் கூறப்பட்டு, ஒரு நெறியின்றி இயலுங் காலை அவ்விரவிய பொருட்குப் பொதுவிடமாயிருப்பது படலமாகும். விதி முதலாவனவற்றைக் கூறும் நூற்பா பலவற்றை அடக்கிக் கொண்டிருப்பது ஒத்து அல்லது இயல் என்றும், பல ஒத்தினை அடக்கிக் கொண்டிருப்பது பிண்டம் என்றும் (செய். 165) கூறப்படும். இளம்பூரணர் கூறும் மூன்று நூல்கள் | தொல் செய்யுளியல் 165 ஆம் நூற்பாவாகிய "மூன்றும் அடக்கிய தன்மைத் தாயின் தோன்றுமொழிப் புலவரது பிண்டம் என்ப" என்னும் நூற்பாவுரையில் இளம்பூரணர் "அவற்றுள் சூத்திரத்தாற் பிண்டமாற்று இறையனார் களவியல் ஒத்தினாற் பிண்டமாயிற்று பன்னிருபடலம்; அதிகாரத்தாற் பிண்டமாயிற்று தொல்காப்பியம். இவற்றை முறையே சிறுநூல், இடைநூல், பெருநூல் எனப்படும்" என்பர். உரை என்னும் செய்யுள் உரை என்னும் செய்யுள் பாட்டிடை வைத்த குறிப்பென்றும், பாவின் றெழுந்த கிளவி என்றும், பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி என்றும், பொருளொடு புணர்ந்த நகை மொழி என்றும் நான்கு பிரிவாக இருந்தென்று தொல்காப்பியர் கூறுகின்றார். H இவ்வுரைச் செய்யுளுக்குரிய வேறுபாட்டினைப் "பல சொல் தொடர்ந்து பொருள் காட்டுவனவற்றுள் ஒசை (அகவலோசை முதலியன) தழியவற்றைப் பாட்டென்றார்; அவ்வோசையின்றிச் செய்யுள் தன்மைத்தாய் வருவது நூல் எனப்பட்டது (இதில் அகவல் முதலிய விகற்ப ஓசை யில்லாவிடினும் பாஅவண்ணத்திற்குக் காரணமாகிய ஓசை