பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 இப்பாட்டைச் சொல்லித் தாளம் கொட்டுகின்றார் போல மார்பில் அடித்துக் கொள்வார்கள். இப்பாட்டினை அவர்கள் ஒரை என்று கூறுகின்றார். இது உரை என்பதன் திரிபாகும். அவர்கள் பாடிவரும் உரையில் ஒரு பகுதியைக் காண்க. "சிட்டுக்கு ருவிகளே! எங்க, சீதைதான் நூலிழக்க உங்க சேனைக்குச் சம்மதமோ?" இவ்வுரை தாலியறுப்பின்போது பாடியது. சிட்டுக் குருவிகளை விளித்து எங்கள் சீதை போன்ற இவள் இன்று தாலியறுக்க உங்கள் கூட்டத்திற்கெல்லாம் சம்மதம்தானா? என்று கேட்கின்றார்கள். இது இருசீர் வஞ்சிப்பாப் போலதான் உள்ளது. எங்க. உங்க' என்று அடிமுதலில் கூனையும் பெற்றுள்ளது. சிட்டுக்குருவிகளே என்னும் தொடரைப் பொருளுக்கியையப் பிரிக்காமல் தாளத்திற் கியையப் பிரித்துள்ளார்கள். இப்பாட்டு அகவல் ஒசையாகிய துரங்கலோசையைப் பெற்று நடக்கிறது. வாய்மொழி இலக்கியமாகிய இது உரை என்னும் செய்யுளாய் இருசீரடி வஞ்சிப்பாப் போல் வந்து நோயும் இன்பமும் என்னும் இரண்டில் நோய் பற்றி எழுந்து அழுகைச் சுவைக்கு உரியதாய்ச் சொல்லா மரபினவற்றை முன்னிலைப்படுத்திக் கூறுவதாய் வகையுளியும் தனிச்சொல்லும் வந்துள்ள நிலையை நோக்கினால் இந்த அமைப்பை எல்லாம் கல்வியறிவில்லாத பெண்கள் எப்படிக் கற்று இதனைப் பாடினர் என்னும் வியப்பே தோன்றுகிறது. உரைச் செய்யுளில் பாவின்றெழுந்த கிளவியை இளம்பூரணர். "வழக்கின்கண் ஒரு பொருளை விளைவாரும் செப்புவாரும் கூறும் கூற்று" என்பர். பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் "பாட்டின்றி சூத்திரத்திற்குப் பொருள் எழுவது போல்வன என்றும், ஒழிந்த பாட்டிற்கும் இவ்வாறே பொருள் எழுதின் அதுவும் இதனுள் அடங்கும் என்பர். இளம்பூரணர் தனித்தஉரைநடை இலக்கியத்தை இது குறிக்கும் என்பர். பேராசிரியரும் நச்சினார்க்கினியரும்