பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 இலக்கண நூற்பாக்களுக்கும் ஆசிரியப்பா முதலிய பாக்களுக்கும் எழுந்த உரையெல்லாம் இதனுள் அடங்கும் வான்பர். பொருள் மரபில்லாப் பொய்மொழியானும் என்பது கட்டுக்கதையே இது பாக்களுக்கு ஒதிய அறம் பொருள் ன்ெபம் என்னும் முப்பொருண்மரபைக் கூறும் முறை போலல்லாமல் கூறப்படுவதாதலின், பொருண்மரபில்லா என்று கூறினர். பொய்ம்மொழி என்றால் நடவாதது. மக்களிடத்தே இப்பொய்மொழியாகிய கட்டுக்கதை பல நெறியால் படைக்கப்பட்டு வழங்குகிறது. இது பண்டு வாய்மொழி இலக்கியமே. இன்று தமிழெழுத்தாளர் பலர் ()|நெறிபற்றிச் சிறுகதை என்னும் பெயரால் நல்ல படைப்பினை எழுதி வருகின்றனர். "பொருளொடு புணர்ந்த நகை மொழி" என்பது இளம் பாணர் மேலதைச் சுட்டி, ஒருவன் பொருண்மரபறியாமல் பொய்க்கட்டுரை எழுதினான், மற்றொருவன் மேற்குறிப்பிட்ட கட்டுரையை எள்ளி நகையாடி உண்மைக்கட்டுரை (பொரு ளொடு புணர்ந்த எழுதுவான். அது பொருளொடு புலாந்த நகைமொழியாயிற்று என்பர். பேராசிரியரும் நசிவினார்க்கினியரும் இதனை உண்மையோடு கூடிய நகைச்சுவைக் கதை என்பர். வாய்மொழி இலக்கியத்தில் ைென வேடிக்கைக்கதை என்பர். தொல்காப்பியர் நான்கு வகையாகக் குறிப்பிட்ட | | || ந!ை களில் முதலிரண்டு புலவராற்று வழக்கிற்கும் உரியதாய் வருகின்றன. பின் இரண்டு பழைய காலத்தில் வாய்மொழி இலக்கியமாகவே வளர்ந்து வந்துள்ளன. தொல்காப்பியர் உரைநடை வகை நான்கு என்று கூறியுள்ள நூற்பாவை அடுத்து, அதுவே தானும் இருவகைத் தாகும் (168) என்றும் 'ஒன்றே மற்றும் செவிலிக் குரித்தே ஒன்றே யார்க்கும் வரைநிலை யின்றே (169)