பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 திணை முதலாயின திரிந்து வருவனவும் என்றவாறு. அவை 'எழுதுவரிக் கோலத்தார் ஈவார்க் குரியார் தொழுதிமைக் கண்ணணைந்த தோட்டார் - முழுதகலா நாணிற் செறிந்தார் நலங்கிள்ளி நாடோறும் பேணற் களமந்தார் பெரிது என்பது புத்தகம் என்னும் பொருள்மேல் திணை திரிந்து வந்தவாறு கண்டுகொள்க' என்பர். முதுமொழிச் செய்யுள் தொல்காப்பியர் 'பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே. அங்கதம் முதுசொல் அவ்வேழ் நிலத்தும் (செய். 75) என்னும் நூற்பாவில் முதுசொல் என்று கூறுகின்றார். இளம்பூரணர் இந் நூற்பாவுரையில் 'பழமொழி யாப்பு எனக் கூறுகின்றார். தொல்காப்பியர் செய்யுளியல் 158ஆம் நூற்பாவில் இதனை ஏதுதுதலிய முதுமொழி என்று குறிப்பிட்டு இது அடிவரையறையில்லாமல் வரும் என்பர். இவர் முன்னர்ச் சொல்லதி காரத்தே தொன்னெறி மொழி வயின் ஆசு குரவும் (எச்சவியல் 52) என்று குறிப்பிட்டுள்ள இந்நூற்பாவுரையில் சேனாவரையர் தொன்னெறி மொழி யின் ஆசுகுரவும் என்றது முதுசொல்லாகிய செய்யுள் வேறுபாட்டின்கண் இயைபில்லன. இயைந்தனவாய் வருவனவும் என்று கூறி இவையெல்லாம் வழங்கியவாறே கொள்வதல்லது இலக்கணத்தான் யாப்புறவுடையவல்ல என்பர். இதன் இலக்கணத்தை 'நுண்மையும் சுருக்கமும் ஒளியு டைமையு மெண்மை மென்றிவை விளங்கத் தோன்றிக் குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம் ஏது நுதலிய முதுமொழி என்ப" என்னும் நூற்பாவால் தொல்காப்பியர் நுவன்றுள்ளார். கூரிதாதல் சுருங்கி விளங்கல் விழுமிதாதல் எளிதில் பொருள் தெரிதல் என்னும் நான்கு இலக்கணத்தை உடைய தாகி கருதிய பொருளை முடித்தற்கு வரும் ஏதுவைக் கருதிய முதுமொழி என்ப. 'இரப்பவர்க் கீயக் குறைபடுமென் றெண்ணிக்