பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பயன்களை அவ்வப்பொழுதே பயக்கத்தக்க சொல்லாற்றலை யுடைய மேலோராவார். அவர்கள் ஆணையாலே ஒருவன் வாழவும் சாவவும் கருதிச் செய்யப்பட்ட மந்திரம் என்க. இது கருதுவது என்ற பொருளில் மந்திரம் என்னும் ஏட்டில் எழுதினால் ஆற்றல் கெடும் என்று கருதி வாய்மொழியாகவே வழங்குதலின் வாய்மொழி என்றும், மறைந்து வழங்கலின் (இரகசியமாக வழங்கலின்) மறைமொழி என்றும் பெயர் பெற்றது என்க. தொல்காப்பியர் 75ஆம் நூற்பாவுள் எழுநிலத்தெழுந்த செய்யுளைக் குறிப்பிடும் பொழுது அங்கதம் (செய்யுளியல் 75) என்ற ஒன்றினைக் குறிப்பிட்டுள்ளார். பின்னர் அடிவரை யறையில்லாத செய்யுளைக் கூறும்பொழுது கூற்றிடை வைத்த குறிப்பு (செய. 158) என்று அதனைக் கூறுகின்றார். பின்னர் அக்குறிப்பு மொழியை 'எழுத்தொடும் சொல்லொடும் புணரா தாகிப் பொருட்புறத் ததுவே குறிப்பு மொழியே என்று கூறுகின்றார். இந்நூற்பாவுரையில் இளம்பூரணர் மேல் அங்கதம் என்று சொல்லி ஈண்டு குறிப்புமொழி என்றதனான் இச்சொல் வசை குறித்து வரும் என்று கூறி, இவ்வங்கதம் புகழ் குறித்து வந்தால் குற்றமென்னையெனில்? என்று வினாயெழுப்பிக் கொண்டு புகழை வெளிப்படை யாகக் கூறக் கேட்டார்க்கும் தனக்கும் இன்பம் பயத்தலின் குறிப்பினால் கூறல் வேண்டுவது வசையென்று கொள்ளப் படும் என்பர். இக்குறிப்புமொழி தன்னை உணர்த்துவதற்குரிய எழுத்தொடும் சொல்லொடும் கூடப் பெறாமல் கூறப்பட்ட பொருளுக்குப் புறம்பாய் நிற்கும் என்பர். இதனைக் கூற்றிடை வைத்த குறித்த என்றதனாலும் அங்கதம் என்றத னாலும் ஒருவன் கூறுகின்ற வாய் மொழியில் குறிப்பாய்த் தோன்றுகின்ற வசையே ஆகும் இது. இதற்கு எடுத்துக்காட்டு 'எனக்கு அவன் இன்ன தீங்கு செய்தான் அவன் நன்கு தன் மனைவி மக்களுடன் வாழட்டும் அழிக என்று பொருள் கருதக் கிடந்தமையை உணர்க.