பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 அரசனுக்கு நடுக்கம் உண்டாம் என்று பேருண்மையைப் புலப்படுத்துகிறது. (2) புறநானூற்றில் மூன்றாவது பாட்டு பாண்டிய மன்னன் ஒருவனை இரும்பிடர்த் தலையார் செவியுறையாகப் பtடியது. புலவர் பாண்டியனைப் பலவகையில் சிறப்பித்துக் கூறிவிட்டுச் செவியுறைப் பொருளாக "நிலம் பெயரினும் நின்சொல் பிழையல" என்று கூறுகின்றார். இங்கே நிலம் என்றது நிலத்திலுள்ள மக்களை நிலத்திலுள்ள மக்கள் சொல் பிறழ்ந்தாலும் அவர்களை இயக்கும் முதல்வனாகிய நீ சொன்ன சொல்லில் மாறாதே, என்கின்றனர். (3) புறநானூற்றில் ஐந்தாவது பாட்டு சேரமன்னன் ஒருவனை நரிவெரூஉத் தலையார் பாடிய செவியுறை. அவர் கூறுவது பெரும! நீ ஞாலங்காவலனாக உள்ளாய், இக்காவல் பெறுதற்கு அரிது. நாட்டில் அருளும் அன்பும் இல்லாதவராய்க் குடிமக்கட்குத் தீங்குபுரிந்து நரகத்தை அடைபவரும் உள்ளனர். நீ அவர்களுடன் சேர்ந்துவிடாமல் உன் குடிமக்களை ஒரு தாய் குழந்தையைக் காப்பாற்றுவது போலக் காப்பாற்றுக" என்று அறிவுறுத்தினர். (4) புறநானூற்றில் ஆறாவது பாட்டு பாண்டிய மன்னன் ஒருவனைக் காரிகிழார் என்ற புலவர் பாடிய செவியுறை "பெரும! உன் வெண்கொற்றக்குடை கடவுளின் திருக்கோயிலை நீ வலம் வருங்கால் தாழ்க, உன்தலை உன்னை வாழ்த்தக் கருதி பெரியோர்கள் எடுத்தகை முன்னே வணங்குமாக" என்று கூறியுள்ளார். இது "பொங்குத லின்றிப் புரையோர் நாப்பண் அவிதல் கடன்" எனக் கூறிய செவியுறை. (5) புறநானூற்றில் முப்பத்தைந்தாவது பாட்டாக உள்ளது சோழமன்னன் ஒருவனை வெள்ளைக்குடிநாகனார் பாடிய செவியுறையாகும். இது சிறந்த அரசியற் கருத்தைக் கூறுவதாகும். "கூர்வேல் வளவனே! நினக்கு உரியனவாகக் கூறும் என்னுடைய சில மொழிகளைக் கேட்பாயாக. குடிமக்கள் தங்கள் குறைகளைக் கூறி முறையிடவரின் அவர்கட்கு நீதி வழங்கிய மன்னனே நாடு செழிக்கும்