பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 மழையைப் பெற்றவனாவான்; நீ கொண்டுள்ள வெண் கொற்றக்குடை வெயிலை மறைப்பதற்காகக் கொள்ளப் பட்டதன்று. அக்குடை குடிகளின் துன்பமாகிய வெயிலை மறைப்பதற்காகவே கொள்ளப்பட்டது. போர்க் களத்தில் உன்படைகள் போர்செய்து கொடுக்கும் வெற்றியும் உழவுக் குடிகள் உழுது உண்டாக்கிய உணவுப்பொருளின் பயனே யாகும் மழை பெய்யுங்காலத்துப் பெய்யாதொழியினும், நாட்டில் விளைவு குறைந்தாலும், மக்களின் இயல்பான நடைமுறை சீர்கேடடைந்தாலும் இந்த உலகம் இவற்றிற்கெல்லாம் காரணம் அரசனே என்று கூறி, அரசன் நெறிமுறையனல்லன் என்று அவனைப் பழித்துக் கூறும் இவற்றையெல்லாம் நீ நன்றாக அறிந்தாயேயானால் உறுதி யறியாதவரது சிறப்பில்லாத சொல்லைத் கேட்காமலிருந்து பாதுகாப்பவராகிய உழவர் குடியை முதற்கண் பாதுகாத்து அவர்தம் உதவியுடன் ஏனைய குடிகளையும் பாதுகாப்பா யாயின் உன்பகைவர் எல்லோரும் உன்னை வழிபட் டொழுகுவர் என்று கூறினார். (6) புறநானூற்றில் நாற்பதாவது பாட்டு சோழமன்னன் ஒருவனை ஆவூர் மூலங்கிழார் பாடிய செவியுறை. "வயவேந்தே! நீ என்றும் இன்சொல்லையும் எளிய செவ்வியையும் பெறுக" என்றது. புறநானூற்றிலே ஆறாவது பாட்டு குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆவூர் மூலங்கிழார் பாடிய பாட்டாகும். அவர் "வல்லாளனாகிய வயவேந்தே அரசனாகிய நீ குடி மக்களிடத்தில் இன்சொல் கூறுபவனாக இருக்க வேண்டும்; அவர் மேலும் உன் குடிமக்கள் உன்னிடத்தில் தம் குறையைக் கூறிக் கொள்வதற்கு வரின் அவர்கள் எளிய செவ்வியை உடையாய் நீ விளங்க வேண்டும்" (புறநானூறு 40) என்று கூறுகின்றார். புறநானூற்றிலே செவியுறையில் ஏழாவது பாட்டு (புறநானூறு 55) பாண்டியன் நன்மாறனை மருதன் இளநாகனார் பாடிய பாட்டு "பூந்தார் மாற! உன்னிடம் களிறு முதலிய நாற்படையும் மாட்சிமையுடன் இருப்பினும்