பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 அப்படையினாலேயே உனக்கு வெற்றி கிட்டி விடாது. அரச வெற்றி அறநெறியை முதலாகக் கொண்டு தோன்றுகி ன்றது. அந்தக் காரணத்தினால் நம்முடையவர் என்று கருதி அவ செய்யும் அநீதிக்கு இயைந்தொழுகிக் கோல் கோடாமலும் இவர் நமக்கு அயலார் என்ற காரணத்தினால் அவருடைய நீதியை அழித்தொழுகாமலும் இருந்து ஞாயிற்றை யொத்த ஆண்மையும் திங்கள் அன்னசாயலும் வானத்தன் ன வண்மையும் என்னும் மூன்றையும் உடையவனாய் இல்லாதோர் இல்லமாக நீ வாழ்வாயாக' என்றனர். புறநானூற்றில் செவியுறையில் எட்டாவதாக உள்ள பாட்டு காய்நெல்லறுத்து (புறநா. 184) என்ற பாட்டாகும். இப்பாட்டு அரசிறையை நெறியறிந்து குடிகளிடமிருந்து வாங்க வேண்டும் என்ற செய்தியை உவமையினால் அழகாகக் கூறுகிறது. யானைக்கு உணவு கொடுத்து வந்தால் ஒரு மாவிற்குக் குறைவான நிலமும் பல நாட்களுக்கு வரும். யானையை அவிழ்த்துவிட்டு அது தனியாகச் சென்று உண்ணத் தொடங்கின் அதன் வாய் புகுவதனினும் அதனுடைய கால் தானே மிதித்துத் துவைத்துப் பாழாக்கும் காரணத்தால் நூறு மாநிலமும் சில நாட்களில் கெடும். நாட்டை ஆள்பவன் அரசியற் சுற்றத்தார் கூறியபடி நடக்கும் மெல்லலியனாகி அவரும் வரிசையறியாக் கல்லென்னும் சுற்றமாயிருந்து குடிமக்க ளிடமிருந்து அன்பு கெட எடுக்கும் பொருள் தர விரும்பின் யானை புக்க புலம்போலத்தானும் உண்ணான் உலகமும் கெடும். யாப்பருங்கல விருத்தி மேல் யானை மன்னர்', என்னும் பாட்டை எடுத்துக்காட்டி இது வியப்பின்றி உயர்ந்தோர்கண் அவிந்து ஒழுகுதல் கடன் என்று அரசற்கு உரைத்தமையால் செவியறிவுறுஉ மருட்பா எனப்படும் என்பர். (கழ-பதி-பக். 213). "பெருவழுதி அன்புடன் என் சொல்லைக் கேட்பாயாக. உன் குடிகளாய் உடைய உழவரிடம் மனம் வருந்தப் பொருள் கொண்டு உன்னை நோக்கி வரும் இரவலர்க்கு உபகாரம் செய்யாதே.