பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 பொருளிலக்கணப் பாகுபாடு தொல்காப்பியரும் பிறரும் கருதுவது தொல்காப்பியர் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி இலக்கணம் கூறியதாகத் தொல்காப்பியப் பாயிரம் கூறுகிறது. அவர் கூறிய என்று சிறப்பித்தோதும் அகப் பொருள் விளக்கப் பாயிரம். யாப்பருங்கலக் காரிகை உரையாசிரியர் "வழுக்கில் விகாரம் என்று சிறப்பித்தவதனால் எழுத்துக்குற்றம், சொற் குற்றம், பொருட்குற்றம் யாப்புக் குற்றம், அலங்காரக் குற்றம், ஆனந்தக் குற்றம் என்னும் இவ்வாறு குற்றமும் படாமல் சொல்லப்படுவன செய்யுள்கள் எனக் கொள்க', என்று கூறிப், பொருட்குற்றத்தைக் கூறுமிடத்துப் பொருட் குற்றமாவது பொருளதிகாரத்தோடு மாறுகொள்ளாதது. என்னை? "பொருளின் வழுவே தமிழ்நடைத் திரிவே" என்றார் ஆகலின் என்பர். அதன் குறிப்புரையாசிரியர் அகமும் புறமுமாகிய பொருள் தமிழுக்கே உரியதாகலின் அதனைத் தமிழ்நடை என்றார். பொருளிலக்கணம் கூறும் நூல் ஒன்றிற்குத் தமிழ்நெறி விளக்கம் என்று பெயரிருத்தலையும் காண்க என்பர். இடனே பருவம் பொழுதுண் பொருள் கடவுள் மாந்தர் களவிழ ஓர் நீர் மாமரம் புட்பறை யாழென் றிவற்றின் ஆகிய மரபின் அகன்ைந் திணைக்கு முந்தைய மூன்றும் முதல்கரு ஏனை ஐந்தா நிலைய துரிப்பொரு ளாகும் என்று யாப்பருங்கல விருத்தியாசிரியர் (கழகப் பதிப்பு - பக் 572) தம் உரையுள் எடுத்தாளுகின்றார். இந்நூற்பா உரிப்பொருளை அடை எதுவுந் தராமல் பொருள் என்றே கூறுகின்றது.