பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 இந்நூற்பா அகனைந்திணையின் முதல் கரு உரி என்னும் முப்பொருளைக் கூறவந்துள்ளது. இந்நூற்பாவில் கூறப்பட்டிருக்கும் இடன் முதலான பல பொருள்களில் அகன் ஐந்திணைக்கு இடனும் பருவமும் பொழுதும் ஆகிய மூன்றும் முதற்பொருள் ஆகும் என்றும், ஏனையவெல்லாம் கருப்பொருள் ஆகும், ஐந்தாம் எண்ணுமுறைக்கண் நின்ற பொருள் என்பது மட்டும் உரிப்பொருள் ஆகுமென்றும் இது கூறுகின்றது. இந்நூற்பா அவ்வாறு கூறுவதால் பொருள் என்பது உரிப்பொருள் என்றே பொருள்படும். எனவே பொருளிலக்கணம் என்றால் உரிப்பொருள் இலக்கணம் என்றே கருதவேண்டியுள்ளது. பொருளிலக்கணத்தில் பொருள் என்னும் உரிப் பொருளே தலைமையானது. அத்தலைமையான உரிப் பொருள் நிகழ்வதற்கு இடமும் காலமும் இடனாகும். இக்கருத்தை, ஒரு நெறிப் பட்டாங் கோரியன் முடியும் கரும நிகழ்ச்சி இடமென மொழிப என்றும், இறப்பே நிகழ்வே எதிர தென்னும் திறத்தியன் மருங்கில் தெரிந்தன. ருள்ளம் பொருணிகழ் வுரைப்பது கால மாகும் என்றும் தொல்காப்பியம் செய்யுளியல் (201, 202) கூறுகின்றது. மேற்கண்ட நூற்பா உரிப்பொருளைக் கருமம் என்றும், பொருள்' என்றும் கூறியுள்ளதை உணர்க. மரபுநிலை திரியா மாட்சிய வாகி விரவும் பொருளும் விரவும் என்ப - அகத்திணையியல் - 4. என்னும் நூற்பாவில் பொருள் என்றது உரிப்பொருளை அறக்கழி வுடைய பொருட்பயம் படவரின் வழக்கென வழங்கலும் பழித்த தென்ப (பொருளியல் - 22)