பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 அவற்றுள் அகம் என்பது களவு கற்பு என்று கருதப்பட்ட ஐந்திணை என்றும், அன்புடைக் காமம் என்பதும், அகப்புறம் என்பது காந்தள் முதலான பன்னிரண்டென்பதும் புறம் என்பது வெட்சி முதலான ஏழ்திணை என்பதும், புறப்புறம் என்பதும் வாகை முதலான மூன்றென்பதும் ஆம். இவற்றை இவ்வாறு கூறுவன அகத்தியரை முதல்வ ராகக் கொண்ட 1 தொல்காப்பியர், 2 அதங்கோட்டாசார், 3 பனம்பாரனார், 4 செம்பூட்சேய், 5 வையாபிகர், 6 அவி நயர், 7 காக்கைப்பாடினியார், 8 துலாலிங்கர், 9 வாய்ப்பியர், 10 கழா அரம்பர், 11 நற்றத்தர், 12 வாமனர் என்னும் பன்னிரு புலவரும் சேர்ந்து இயற்றிய பன்னிருபடலம் என்னும் இலக்கண நூலும், அதனைப் பின்பற்றியெழுந்த புறப்பொருள் வெண்பா மாலையும், தொல்காப்பிய அகத்தியமுடையார் என்னும் இலக்கணநூலும், வாய்ப்பியமும் ஆகும். வீரசோழியம் இவ்வாறு கூறும் நூல்களுள் ஒன்றென்பது முன்னே காட்டப்பட்டது. ஒங்குகட லுடுத்த வியன்கண் ஞாலத்துத் தாங்கா நல்லிசைத் தமிழ்க்குவிளக் காகுந வானோ ரேத்தும் வாய்மொழிப் பல்புகழ் ஆனாப் பெருமை அகத்தியன் என்னும் அருந்தவ முனிவன் ஆக்கிய முதனூல் பொருந்தக் கற்றுப் புரைதப வுணர்ந்தோர் நல்லிசை நிறுத்த தொல்காப் பியனும் என்னும் பன்னிருபடலப் பாயிரத்தானும் மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத் தென்மலை யிருந்த சீர்சான் முனிவரன் தன்பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன்முதல் பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த பன்னிரு படலமும் பழிப்பின் றுணர்ந்தோன் என்னும் புறப்பொருள் வெண்பாமாலைப் பாயிரத்தானும் _அறியப்படும் செய்திகள்:- வானவர் வேண்டிக் கொள்ள பொதியமலையில் வந்திருந்த அகத்திய முனிவனிடத்தே அகத்தியம் என்னும் முதல்நூலைக்கற்ற தொல்காப்பியன் +