பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 முதலாகிய பன்னிரண்டு புலவரும் இயற்றிய பன்னிருபடலம் என்னும் இலக்கணநூல் என்பதாகும். இறையனார் களவியல் பன்னிரு படலத்தை அளவினால் பெயர் பெற்றது என்று கூறுகிறது. இது பன்னிரண்டு புலவரால் இயற்றப்பட்ட பன்னிரண்டு படலத்தை உடையதாதலின் இது தொகை நூலாகும். இளம்பூரணர் கூறும் மறுப்பு பன்னிரு படலம் முதலானவை புறப்பொருளைப் பன்னிரண்டு வகைப்படக் கூறுகின்றன. இவ்வாறு புறப் பொருளைப் பன்னிரண்டு வகைப்படக் கூறில், அகப் பொருளும் பன்னிரண்டாகி மாட்டேறு பெறுதல் வேண்டும் அகத்தினை ஏழாகிப் புறத்திணை பன்னிரண்டாகில், "மொழிந்த பொருளோடு ஒன்ற வைத்தல்" (மரபியல் 12) என்னும் தந்திரவுத்திக்கும் பொருந்தாதாகி, மிகைபடக் கூறல், தன்னால் ஒருபொருள் கருதிக்கூறல் (மரபியல், 110) என்னும் குற்றமும் பயக்கும் என்க. அன்றியும், பெருந்தினைப் புறனாகிய காஞ்சிய நிலையாமையாதலானும், பொதுவியல் என்பது பல்லமா செய்து படையுள் தப்பிய, நல்லாண் மாக்கள் எல்லாரும் பெறுதலின், திறப்பட மொழிந்து தெரிய விரித்து, முதற்பட எண்ணிய எழுதினைக்கும் உரித்தே, எனத் தானே (பன்னிருபடலம்) கூறுகின்றாராதலின் (அதனை) மறத்திற்கு முதலாகிய வெட்சியினை எடுத்துக் கோடற்கண்ணும் கூறாமையானும், கைக்கிளையும் பெருந்தினையும் (ஆகிய இவற்றை அகப்) புறம் என்றாராயின் அகத்தினை ஏழ் என்னாது ஐந்து என வேண்டுமாதலானும், பிரமம் முதலாகச் சொல்லப்பட்ட மணம் எட்டனுள்ளும் யாழோர் கூட்டமாகிய மனத்தை ஒழித்து ஏனைய ஏழும் புறப்பொருளாதல் வேண்டுதலானும் (5) முனைவன் நூலிற்கும் கலிமுதலாகிய சான்றோர் செய்யுட்கும் உயர்ந் தோர் வழக்கிற்கும் (கைக்கிளை பெருந்திணையைப் புறம் என்று கூறுதல் பொருந்தாது என்க என்பர். (புறத்திணையியல் தொடக்கம்).