பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 இரண்டு நெறி தமிழில் பொருளிலக்கணம் கூறும் நெறி இரண்டு பிரிவாக உள்ளது. அகத்திணையாகிய காமம் ஏழாகக் கருதப்பட்டு இவை ஒவ்வொன்றின் புறமாக 6T(ԼՔ புறத்திணைகள்தோன்றின என்று கூறும் முறையொன்றும், அகத்திணையோடு புறத்திணையை இயைபுபடுத்தாமல் பொருளிலக்கணம் அகம் அகப்புறம், புறம் புறப்புறம் என நான்காகப் பிரிக்கப்பட்டு மேற்கூறிய நான்கில் அகம் ஐந்திணை ஒழிய ஏனைய புறம், வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி நொச்சி உழிஞை, தும்பை என ஏழாகவும், புறப்புறம் வாகை பாடாண் பொதுவியல் என மூன்றாவும் அகப்புறம் கைக்கிளை பெருந்திணை என இரண்டாகவும் ஆக பன்னிரண்டு திணைகளைப் புறத்திணை என்று கருதி வகுத்துக் கொண்டு பன்னிரு படலமும் புறப்பொருள் வெண்பாமாலையும் கூறுகின்றன. இந்நூலிரண்டும் கூறும் முறை தொல்காப்பிய முறைக்கு ஏற்புடையதாகவில்லை. அதனால் பன்னிரு படலத்துள் முதற்கண்ணதாகிய வெட்சிப் படலத்தைத் தொல்காப்பியர் இயற்றினார் என்றல் பொருந்தாது என்று கூறி இளம்பூரணர் மறுக்கின்றார். அவர் கூறும் காரணங்களாவன:1. புறப்பொருள் பன்னிரண்டு வகைப்படக் கூறில் அகமும் பன்னிரண்டாகி மாட்டேறு பெறுதல் வேண்டும்: அகத்தினை ஏழாகிப் புறத்தினை பன்னிரண்டாகில் மொழிந்த பொருளோடு ஒன்ற வைத்தல் என்னும் உத்திக்கும் பொருந்தாமல் குற்றமாகும். 2. வஞ்சியின் எதிர் காஞ்சி என்று கூறி, வந்த வேந்தனைக் கண்டு அஞ்சாது எதிர்சென்று ஊன்றல் காஞ்சி எனக் கூறின் பெருந்திணைப்புறன் காஞ்சி என்று கொண்டு, அது பல்வகை நிலையாமைப் பொருள்பற்றி வரும் என்று கூறுதலுக்கு மாறுபடுதலானும், 3. கைக்கிளை பெருந்திணை (பன்னிருபடலக் கருத்துப் படி) புறன் ஆயின், அகத்தினை ஏழு என்று கூறுதல் பொருந்தாதாம்.