பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 இளம்பூரணர், யாப்பருங்கல விருத்தியாசிரியர் காலம் வரை பன்னிருபடலம் என்னும் நூல் வழங்கி வந்ததாகவே தெரிகின்றது.இவ்விருவரும் அம்முழுநூலை முற்றும் உணர்ந்திருந்ததாகவே கருதி உணர்ந்து கொள்ள வேண்டி யுள்ளது. தொல்காப்பியர் கூறும் பொருளிலக்கண நெறியும் பன்னிருபடலம், புறப்பொருள் வெண்பாமாலை கூறும் பொருளிலக்கண நெறியும் வெவ்வேறு ஆகும். நச்சினார்க்கினியர் கருத்து தொல்காப்பியம் அகத்திணையியல் தொடக்கத்தே நச்சினார்க்கினியர் "அகத்தினை புறத்திணை என இரண்டு தினை வகுத்து, அதன்கட் கைக்கிளை முதல் பெருந்திணை யிறுவாய் ஏழும் வெட்சி முதல் பாடாண்டினை இறுவாய் ஏழுமாகப் பதினான்கு பால் வகுத்து' என்றும், "முற்படக்கிளந்த எழுதிணை என்ப" (அகத்திணையியல்1) எனவே பிற்படக் கூறப்பட்ட புறத்தினையும் ஏழுள வென்றவாறாயின்று. எனவே இப்பதினான்கு மல்லது வேறு பொருளின்றென வரையறுத்தாராயிற்று. பிற்படக் கிளந்த புறத்தினை வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்டினை என வரும், ஒழிந்தோர் பன்னிரண்டு என்றாரதலிற் புறத்தினை ஏழென்ற தென்னை எனின், அகங்கை இரண்டு உடையார்க்குப் புறங்கை நான்காகாது இரண்டாயவாறு போல, அகத்தினை ஏழற்கும் புறத்திணை ஏழென்றலே பொருத்தமுடைத்தாயிற்று” என்றும், "வேந்துவிடுமுனைஞர்" (புறத்திணையியல்-2) என்றமையான் இரு பெருவேந்தரும் தண்டத்தலைவரை ஏவி விடுவா ரென்றும்,'ஆதந்தோம்பல் (புறம்-2) என்றதனால் களவின்கட் கொண்ட ஆவினை மீட்டுத் தந்தோம்பலென்றும் பொருள் கூறுமாறு சூத்திரஞ் செய்தாராகலின் இருபெரு வேந்தர் தண்டத் தலைவரும் அவர் ஏவலான் நிரைகோடற்கும் மீட்டற்கும் உரியராயினார். ஆகவே, இருவர்க்குங் கோடற்றொழில் உளதாயிற்றாதலின் அடித்துக் கோடலும் மீட்டுக்கோடலும் வெட்சி ஆயின என்றும் ஆயின் மீட்டல் கரந்தை' என்பரால் எனின் அதனையும் இச்சூத்திரத்தானும் வருகின்ற சூத்திரத்தானும் வெட்சி என்றே ஆசிரியர்