பக்கம்:தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியனார் வாழ்ந்த காலத்திற்கு நெடுங்காலம் பிற்பட்டுத் தோன்றிய இவ்வுரையாசிரியர்கள், தொல்காப்பியனார் தம்நூலில் விரித்துக்கூறிய தமிழியல் வாழ்வினையும் பிற்காலத்தில் தமிழ் நாட்டில் ஆரியவினத்தவராதற் புகுத்தப்பட்ட வருணாச்சிரமக் கோட்பாட்டையும் பிரித்துனரும் வாய்ப்பின்றித் தம் காலச்சூழ் நிலைக்கு ஏற்பத் தொல்காப்பியப் பொருளதிகாரத்திற் சில நூற்பாக்களுக்கு உரை வரைந்துள்ளார்கள். இங்ங்னம் தமிழர் வாழ்வியலோடு பொருந்தாத கருத்துக்கள் இளம்பூரணருரையிற் சிலவாகவும் அவர்க்குக் காலத்தாற் பிற்பட்டு வந்த நச்சினார்க்கினியருரையிற் பலவாகவும் இடம்பெற்றிருத்தல் காணலாம். இவ்விரு வருரைகளையும் ஒப்பிட்டுப்பயில்வார்க்கு இவ்வுண்மை இனிது புலனாகும்.

இங்ஙனம் தொல்காப்பியவுரைகளில் இடம்பெற்ற அயலவர் கொள்கைகள் இன்னின்ன என இனங்கண்டு விலககியும் ஆசிரியர் தொல்காப்பியனார் தம் நூலில் அறிவுறுத்திய தமிழியற் கோட்பாடு கள் இவையெனத் தெளிந்து ஏதுக்களுடன் விளக்கியும் தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கு மெய்யுரை காணுந்திறத்திற் புதிய உரைகாண வேண்டும் என்னும் வேட்கை 1933 முதல் 1938 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்துறைத் தலைவராக விளங்கிய பேராசிரியர் சோமசுந்தர பாரதியார் உள்ளத்தே முகிழ்ந்தெழுந்தது. அதன்பயனாகத் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் அகத்திணையியல், புறத்திணையியல், மெய்ப்பாட்டியல் ஆகிய மூன்றியல்களுக்கு நாவலர் பாரதியார் அவர்கள் பிற்கால உரையாசிரியர்கள் கருத்தின் வழிச்செல்லாது தொல்காப்பிய மூலத்தினையே அடியொற்றிப் புதிய உரையினை வரைந்துள்ளார்கள். பாரதியாரவர்களது புத்துரை பெரும்பாலும் இளம்பூரணர் உரையினை அடியொற்றியும் அவ்வுரையில் இடம்பெற்றுள்ள ஆரியக்கொள்கைகள் தொல்காப்பியனார் கருத்தொடு பொருந்தாமையைப் புலப்படுத்தியும் இளம்பூரணர் காலத்திற்குப்பிற்பட்ட நச்சினார்க்கினியர் தமது உரையில் வேண்டுமென்றே புகுத்திய ஆரியக்கொள்கைகளைத் தக்க காரணங்கள் காட்டி மறுத்தும் செல்லுதல் காணலாம். - -

உயர்திணை மக்களது வாழ்வியலை அகம் புறம் என இரு

7

7